ராஜமவுலியின் அடுத்த பட ஷூட்டிங் எப்போது?

By செய்திப்பிரிவு

ஹைதராபாத்: ராஜமவுலி இயக்கத்தில் ஜூனியர் என்.டி.ஆர், ராம்சரண் நடித்த ‘ஆர்ஆர்ஆர்’ திரைப்படம் மாபெரும் வரவேற்பைப் பெற்றது. படத்துக்கு கீரவாணி இசை அமைத்திருந்தார். இந்தப் படத்தில் இடம்பெற்ற ‘நாட்டு நாட்டு’பாடலுக்கு ஆஸ்கர் விருதும் கிடைத்தது.

இதைத்தொடர்ந்து ராஜமவுலி இயக்கும் படத்தில், மகேஷ் பாபு ஹீரோவாக நடிக்கிறார். ஹாலிவுட் படமான ‘இண்டியானா ஜோன்ஸ்’ போல இந்தப் படம் உருவாக இருப்பதாகவும் ஆக் ஷன், அட்வெஞ்சர் ஜானரில் இருக்கும் என்றும் இதன் கதை உலகம் முழுவதும் வெவ்வேறு இடங்களில் நடப்பது போல அமைக்கப்பட்டு இருப்பதாகவும் ராஜமவுலி ஏற்கெனவே கூறியிருந்தார். இதனால் இந்தப் படத்துக்கு எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

இந்நிலையில் இந்தப் படம் பற்றி, மகேஷ் பாபுவின் பிறந்தநாளான ஆக.9-ம் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என்றும் அடுத்த வருடம் படப்பிடிப்பு தொடங்கும் என்றும் கூறப்படுகிறது. நடிகர் மகேஷ்பாபு ‘குண்டூர் காரம்’ என்ற படத்தில் இப்போது நடித்து வருகிறார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

10 mins ago

சினிமா

44 mins ago

சினிமா

2 hours ago

சினிமா

2 hours ago

சினிமா

5 hours ago

சினிமா

6 hours ago

சினிமா

6 hours ago

சினிமா

7 hours ago

சினிமா

9 hours ago

சினிமா

10 hours ago

சினிமா

14 hours ago

சினிமா

14 hours ago

சினிமா

14 hours ago

சினிமா

14 hours ago

சினிமா

15 hours ago

மேலும்