‘வாத்தி’ இயக்குநர் வெங்கி அட்லூரி படத்துக்கு இசையமைக்கும் ஜி.வி.பிரகாஷ் 

By செய்திப்பிரிவு

‘வாத்தி’ படம் மூலம் கவனம் பெற்ற தெலுங்கு இயக்குநர் வெங்கி அட்லூரி இயக்கும் புதிய படத்துக்கு ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைக்கிறார்.

தெலுங்கு இயக்குநர் வெங்கி அட்லூரி இயக்கத்தில் தனுஷ்,சம்யுக்தா நடிப்பில் கடந்த பிப்ரவரி மாதம் திரையரங்குகளில் வெளியான படம் ‘வாத்தி’. தெலுங்கில் ‘சார்’ என்ற பெயரில் வெளியானது. இந்நிலையில் இந்தப்படத்தைத் தொடர்ந்து இயக்குநர் வெங்கி அட்லூரி இயக்கும் புதிய படத்தில் நாயகனாக நடிக்கிறார் துல்கர் சல்மான். சித்தாரா என்டர்டெயின்மென்ட் நிறுவனம், பார்ச்சூன் ஃபோர் சினிமா நிறுவனத்துடன் இணைந்து இந்தப் படத்தைத் தயாரிக்கிறது. இந்நிலையில் ஜி.வி.பிரகாஷ்குமாரின் பிறந்தநாளை முன்னிட்டு அவர் இப்படத்தில் இசையமைக்க உள்ளதாக படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. இந்தப் படத்தின் படப்பிடிப்பு அக்டோபரில் தொடங்க உள்ள நிலையில் படம் அடுத்த ஆண்டு கோடை விடுமுறையில் வெளியாகும் என கூறப்படுகிறது.

நடிகர் துல்கர் சல்மானை பொறுத்தவரை அவர் தற்போது, ‘கிங் ஆஃப் கோதா’ படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் வேலைகளில் பிஸியாக இருக்கிறார். இந்தப்படம் ஓணம் பண்டிகையை முன்னிட்டு ஆகஸ்ட் மாதம் வெளியாகும் என தகவல் வெளியாகியுள்ளது. இந்தப் படத்துக்குப் பிறகு அவர் வெங்கி அட்லூரி படத்தின் படப்பிடிப்பில் இணைய உள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

1 hour ago

சினிமா

3 hours ago

சினிமா

3 hours ago

சினிமா

4 hours ago

சினிமா

4 hours ago

சினிமா

4 hours ago

சினிமா

13 hours ago

சினிமா

13 hours ago

சினிமா

14 hours ago

சினிமா

16 hours ago

சினிமா

16 hours ago

சினிமா

19 hours ago

சினிமா

20 hours ago

சினிமா

20 hours ago

சினிமா

21 hours ago

மேலும்