தெலுங்கில் நடிகர் பவன் கல்யாண் படத்தில் நடிக்கவிருக்கிறார் அர்ஜுன் தாஸ்.
'கைதி', 'அந்தகாரம்' மற்றும் 'மாஸ்டர்' உள்ளிட்ட படங்களில் நடித்தவர் அர்ஜுன் தாஸ். இவரது கம்பீரமான குரல் பலரையும் கவர்ந்தது. எந்த நிகழ்ச்சிக்குச் சென்றாலும் 'கைதி' படத்தின் வசனம் பேசுங்கள் என ரசிகர்கள் கத்துவார்கள். அந்தளவுக்குப் பிரபலமாகிவிட்டார். தற்போது வசந்த பாலன் இயக்கத்தில் உருவாகி வரும் படத்தில் நாயகனாக நடித்து வருகிறார் அர்ஜுன் தாஸ்.
தெலுங்கிலும் இவர் நடித்து வருகிறார். இதனிடையே, அஜித்தின் 'விடாமுயற்சி' படத்தில் வில்லனாக நடிக்க இருப்பதாக பேச்சுக்கள் வெளிவந்துள்ளன. இதற்கு மத்தியில், தற்போது தெலுங்கில் பவர் ஸ்டார் பவன் கல்யாண் படத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார் அர்ஜுன் தாஸ். சஹோ படத்தை இயக்கிய சஜித் இயக்கத்தில் நடிகர் பவன் கல்யாண் தற்போது நடித்து வருகிறார்.
ஓஜி எனப் பெயரிடப்பட்டுள்ள இப்படத்தில்தான் அர்ஜுன் தாஸ் நடிக்க இருக்கிறார். இதன் அதிகாரபூர்வ அறிவிப்பை, படத் தயாரிப்பு நிறுவனமான டிவிவி என்டர்டெயின்மென்ட் நிறுவனம் அறிவித்துள்ளது. பவன் கல்யாணுக்கு வில்லனாக அர்ஜுன் தாஸ் நடிக்கலாம் என்று சொல்லப்படுகிறது.
முக்கிய செய்திகள்
சினிமா
22 mins ago
சினிமா
36 mins ago
சினிமா
44 mins ago
சினிமா
1 hour ago
சினிமா
1 hour ago
சினிமா
2 hours ago
சினிமா
4 hours ago
சினிமா
18 hours ago
சினிமா
22 hours ago
சினிமா
22 hours ago
சினிமா
23 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago