ட்வீட்டாம்லேட்: இனிமே இப்படித்தான் - சந்தானம் சரவெடியில் காமெடித் திருவிழா!

By செய்திப்பிரிவு

"சந்தானம் படத்தைப் பார்க்க தியேட்டருக்கு எதுக்குப் போகணும்?"

"துக்கம், துயரம், துன்பம் எல்லாம் மறந்து, வாய்விட்டு சிரிச்சு மனசு லேசானா போதும்."

பொழுதுபோக்குக் கலைகளில் மிக முக்கியத்துவம் வாய்ந்த வாய்விட்டு சிரிக்க வைப்பது என்ற உயரிய நோக்கம் கொண்ட கலைஞர்களிடம் உன்னத கதைகள், இயல்பு வாழ்க்கை, லாஜிக் மேட்டர்கள், உலகத் தரம், உள்ளூர் உரம் எல்லாம் பார்ப்பது தேவையில்லாததுதானே?

ரசிகர்கள் நிறைந்த அரங்கில், மக்கள் மெய்மறந்து சிரித்து, வாய் நிறைய விசிலிடித்து மகிழ்ச்சியில் பொங்கவைத்தாலே அதுவும் சினிமாதான். இது கூட நம் சமூகத்துக்குத் தேவையான பொழுதுபோக்குக் கலைதான் என்று சொல்ல வைக்கின்றன, இனிமே இப்படித்தான் படத்தைப் பார்த்து ரசித்தவர்களின் ட்வீட் விமர்சனங்கள்.

ட்வீட்டாளர்கள் பெரும்பாலானோரின் கருத்துகளைப் பார்க்கும்போது, அறிவுஜீவித்தனத்துக்கு சற்று நேரம் ஓய்வு கொடுத்துவிட்டு, திரையரங்கு சென்று ரசிகர்களுடன் ரசிகர்களாக ஆரவாரத்துடன் ரசித்துப் பார்த்து மகிழத் தூண்டுகிறது, சந்தானம் அண்ட் கோ-வின் இந்தப் புதிய முயற்சி.

சீரியஸ் சினிமா ஆர்வலர்கள், விமர்சன வித்தகர்கள் சிலரைத் தவிர, பெரும்பாலான ரசிகர்களும் விமர்சகர்களும் சந்தானத்துக்காகவும், நகைச்சுவை அம்சங்களுக்காகவும் நிச்சயம் ஒரு முறை தியேட்டர் சென்று பார்க்கலாம் என்று பரிந்துரைக்கும் இப்படம் குறித்த ட்வீட்டாளர்களில் சில வரி பார்வைகள் தான் இன்றைய ட்வீட்டாம்லேட்....

* Raja Boobalan ‏@KbmRaja - லாஜிக் மிஸ் ஆனாலும் சந்தானத்தோட காமெடி சரவெடில படம் பின்னி பெடலெடுக்குது.

* GOPALA KRISHNAN ‏@kgkrishn - நாட்ல மெகாசீரியல் பார்த்து அழுத பொம்பளைங்கள விட, மேரேஜ்சிடி பார்த்து அழுத ஆம்பிளைங்கதான் அதிகம். #இனிமேஇப்படித்தான்

* sreenath ‏@cidiot - #inimeippadithan. செம்ம கலாசலான படம். ஸ்பெஷல்லா இன்டெர்வல் ப்ளாக். தியேட்டர்ல பயங்கர க்ளாப்ஸ். படத்தோட முடிவு சுமார் தான்.

* சி.பி.செந்தில்குமார் ‏@senthilcp - முதல் கோணல் முற்றும் கோணல் ஆகாது என்பதை மெய்ப்பிப்பது போல் சந்தானம் ஹீரோவாக நடிக்கும் 2-வது படமான இனிமே இப்படித்தான் ஹிட் ஆனதற்கு வாழ்த்து.

* kobikashok ‏@kobikashok - இனிமே இப்படித்தான்: சிரிச்சு சிரிச்சு வயிறு வலிக்குது!!!

* வினுதா ‏@Vinuthaas - செம பாலிஷ்ட் குட் லுக்கிங் சந்தானம் #இனிமே இப்பிடித்தான்

vj* jey ‏@jey5692 - சந்தானத்த நெட்டிசன்கள் கலாய்கபோகும் நாட்கள் வெகுதொலைவில் இல்ல. #இனிமே இப்படிதான்.

* நெல்லைக்காரன் ‏@tirunelvelian - இனிமே இப்படித்தான்: படம் முழுக்க நல்ல நகைச்சுவை. கிளைமக்ஸ் ட்விஸ்ட் நச். ஆனால் நெறைய பேருக்கு அது பிடிக்குமான்னு தெரில. #mustwatch #notboring

* su.senthilkumaran ‏@rajathirumagan - துவக்கம் முதல் கடைசிவரை காமெடி திருவிழா நடத்துகிறார் சந்தானம்!

* விஜய்சேதுபதி விசிறி ‏@prakash24894 - பாத்தேன். ஒரு லுக்குல செம சாங் ரிப்பீட் மோட் #கானாபாலா டா #இனிமேஇப்படித்தான்

* *குணசீலன்* ‏@ArunkumarNanthi - சந்தானம் ஹீரோவாக நடிக்கும் இனிமே இப்படித்தான் ஹிட்...

* கார்த்திக் ‏@KarthikLawrence - டயலாக் மாடுலேஷன், பாடிலேங்வேஜ்ம் மாத்திட்டாருனா சந்தானம் பெர்பெஃக்ட் ஹிரோ மெட்டரியல்.

* saravanan ‏@ssaran75 - சந்தானம் ஒன்லைனர்கள் - தியேட்டரில் சிரிப்பலை & முழு நீள காமெடி ஓகே 3/5 #InimeyIppadithaan

* மோ-(கி)-னி ‏@moni_kutty - ஹீரோலாம் காமிடியா நடிக்குறதாலதான் இப்போ காமிடியனே ஹீரோவா நடிக்க ஆரம்பிச்சிட்டாங்க... #வாழ்த்துக்கள் #இனிமேஇப்படித்தான் #சந்தானம்

* Magesh G Kshathriyan ‏@MageshCheyyur - சந்தானத்தின் உழைப்புக்கும், தன்னம்பிக்கைக்கும் கிடைத்திருக்கும் மாபெரும் வெற்றி #இனிமேஇப்படித்தான் சந்தானம் நடிக்கணும்.

* ranjan perumal ‏@ranjanrithanya - "இந்த சீனி சிரிப்பு காட்டி தானே பார்த்திருக்கே? சீன் காட்டி பார்த்ததில்லையே? ஃபைட் பஞ்ச் பை சந்தானம் # இ இ"

* Hari Krishna Raju ‏@harikraju - இனிமே இப்படித்தான் பார்க்கக் கூடிய பொழுதுபோக்குப் படம். டைம் பாஸ் பண்ணலாம். நண்பர்களுடன் சென்று எஞ்சாய் பண்ணுங்க.

* அரிசி கடை பாலு @anbesivambala - #இனிமேஇப்படித்தான் படம் மூலமா என்ன தெரியவருதுனா, உன் மாமன்காரனை நம்பாதே அரேஞ்ட் மேரேஜ்தான் உனக்கு நடக்கும்... நீ அசிங்கப்படுவ அவமானப்படுவ.

* Dr.எட்டு @8tttuu - நட்புக்குள்ள என்னடா நல்லவன் கெட்டவன்னுக்கிட்டு... நட்புனாலே நல்லவந்தான்.. #சந்தானம் பாரைகள்.

* Miss You Dhoni @RDBalaji - இப்போ எதுக்கு அவார்ட் பங்ஷனுக்கு வந்த மாதிரி தேம்பி தேம்பி அழுவுறீங்க..? #InnimeyIppadithaan Punch.

* Magesh G Kshathriyan @MageshCheyyur - தமிழ்நாட்டில் தமிழனுக்கே இனி முன்னுரிமை கொடுக்க வேண்டும். அது சினிமா துறையிலும் இருக்க வேண்டும். #இனிமேஇப்படித்தான்.

* கருவாயன் சேண்டலுட் @anandantamilan - உன் காதலைப் போரடிக்காமப் பாத்துக்கிட்டா, அது உன்னை பீர் அடிக்காம பாத்துக்கும், சந்தானம் #இனிமேஇப்படித்தான்.

* MASSS MAN SURIYA ‏@SuryaBloodz - இனிமே இப்படித்தான் ஹவுஸ்ஃபுல். நகைச்சுவைப் படங்களுக்கான ரசிகர்களின் வரவேற்பையே இது காட்டுகிறது. சந்தானம் மீதான நம்பிக்கையையும் காட்டுகிறது. படம் நன்றாகவே இருக்கிறது.

* Raj ‏@rjkrraj - #InimeyIppadithan - உண்மையில் புதிதாக எதுவும் இல்லைதான். படத்தைக் காப்பாற்றும் ஒரே அம்சம், சந்தானத்தின் ஒன்லைனர்கள். படத்தை ரசித்துப் பார்க்கலாம்.

* MusthaK ‏@YoursMuSTaK - #InimeyIppadithan : எளிமையான கதைக் கரு. ஆனால், முழுக்க முழுக்க நகைச்சுவை கலாட்டா. பக்கா காமெடி!

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

7 hours ago

சினிமா

7 hours ago

சினிமா

7 hours ago

சினிமா

10 hours ago

சினிமா

10 hours ago

சினிமா

22 hours ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

மேலும்