பிக்பாஸ் ரியாலிட்டி ஷோ பிறரது துன்பத்தில் இன்பம் காணும், மகிழ்ச்சியடையும் சாடிச (Sadistic) நிகழ்ச்சிதான், ஆனால் மக்கள் அதை விரும்புகிறார்கள் என்று நடிகை அனுயா கூறியுள்ளார்.
ஸ்டார் விஜய் தொலைக்காட்சி வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியிலிருந்து வெளியேற்றப்பட்டபிறகுதான் அனுயா சுதந்திரமாக மூச்சுகற்றை சுவாசித்திருக்கிறார்.
கடந்த சில நாட்களுக்கு முன்னர்தான் பிக்பாஸ் தமிழ் நிகழ்ச்சியில் பங்கேற்கும் தமிழ் பிரபலங்களில் ஒருவராக சிவா மனசுல சக்தி படத்தில் நாயகியாக நடித்த அனுயா வெற்றி பெறும் எண்ணத்தில் பங்கேற்றார். ஆனால் அந் நிகழ்ச்சியில் வெளியேறும் முதல் நபராக அனுயா தேர்ந்தெடுக்கப்பட்டு வெளியேற்றப்பட்டுள்ளார்.
இந்த நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனுபவத்தை தி இந்து ஆங்கிலத்திடம் அனுயா பகிர்த்திருக்கிறார்.
பிக்பிஸ் இல்லத்தில் நிங்கள் கற்றுக் கொண்ட பெரிய பாடம் ஏது?
நான் 14 தமிழர்களுடன் இருக்க வேண்டும் அதுவும் தமிழில்தான் பேச வேண்டும் என்பது பிக்பாஸின் விதி. அதில் என்னை நான் உட்புகுத்திக் கொண்டேன். தற்போது தமிழில் நன்றாக பேச கூடியவராக நான் வெளி வந்துள்ளேன். அத்துடன் என்னை பற்றி நிறைய அறிந்து கொண்டேன். மேலும் மற்றவரிகளிடம் எப்படி அனுசரித்து செல்வது என்பதையும் நான் கற்று கொண்டேன்.
பிக்பாஸ் இல்லத்தில் உங்கள் நெருங்கிய நண்பர் யார்? ஏன்?
ஓவியா. அவர் வெறுப்பை விரும்பாதவர். அமைதியை விருப்பவர். நானும் அப்படிதான்.
யார் இந்த பிக்பாஸ் நிகழ்ச்சியில் யார் வெற்றி பெறுவார்கள் என்று நீங்கள் கருதுகிறீர்கள்?
பிக்பாஸ் இல்லத்தில் மிகுந்த பக்குவமானவராக நான் நினைப்பது கணேஷ் வெங்கட்ராமன். இதுபோன்ற இல்லத்தில் அமைதி ஏற்படுவது அங்குள்ள தலைவரால் அல்ல. அங்கு அனுசரித்து செல்லும் மக்களால். ஒருவருக்கொருவர் அனுசரித்து வாழ ஒரே வழி அன்பு மற்றும் உரையாடல் மட்டுமே. ஒருவரை பற்றி மற்றவர்கள் புறம் பேசுவது அல்ல.
இத்தகைய ரியாலிட்டி டிவி நிகழ்ச்சியின் மூலம் பார்வையாளர்களின் மனதில் ஏற்படும் விளைவுகள் பற்றி எதிர்மறையான விமர்சனங்கள் உள்ளன. பார்வையாளர்களில் ஒருவராக நீங்கள் எப்படி இதைக் பார்க்க்கிறீர்கள்?
அது அந்த ரியாலிட்டி ஷோவின் தன்மையை பொறுத்தது. இது போன்ற நிகழ்ச்சிகள் நேர்மையாக சொல்ல போனால் சாடிஸ்டிக் (மற்றவர்கள் துன்பத்தில் இன்பம் காண்பது) தன்மை கொண்டவை. ஆனால் மக்கள் அதை விரும்புகிறரர்கள்.
இதன்காரணமாகதான் இந்த நிகழ்ச்சி பிற மாநிலங்களிலும், நாடுகளிலும் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது.
இதுவே எந்த அளவுக்கு மக்கள் சாடிசத்துடன் தங்களை தொடர்பு படுத்திக் கொள்ள விரும்புகிறார்கள் என்பதை சுட்டிக்காட்டுகிறது. முட்டாள்தனமான சண்டையாக இருந்தால் கூட என்ன நடக்கிறது என்பதை தெரிந்து கொள்ள பார்வையாளர்கள் விரும்புகின்றனர். அதாவது உளவியல் ரீதியாக நம்மை கொஞ்சம் மேலே வைத்து சிந்திக்க உதவுகிறது, அதாவது மற்றவர்களை விட நம் வாழ்க்கை மேம்பட்டதாக உள்ளது என்று எண்ண வைக்கிறது. ரியாலிட்டி ஷோகக்ள் இப்படித்தானே வேலை செய்கிறது, இது சரிதானே?
ஒரு விதத்தில் இது நல்லதுதான். வதந்தியும், பிறரைப் பற்றிய கிசுகிசுவும் நல்லதுதான் என்கின்றனர் சிலர். இது நம் அடக்கப்பட்ட உணர்வுகளுக்கு ஏதோ ஒரு விதத்தில் வடிகாலாக உள்ளது. இதனால் தன்னம்பிக்கை ஏற்படுகிறது. இதே போல்தான், இந்த நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் நட்சத்திர போட்டியாளர்களுடன் பார்வையாளர்கள் தங்களை ஒப்பிட்டுக் கொள்கின்றனர். அதாவது நட்சத்திரங்களுக்கும் நமக்கும் ஒரேவிதமான பிரச்சினைகளே இருக்கின்றன என்று அவர்கள் நினைக்கும் போது இதனுடன் தங்களை மேலும் தொடர்பு படுத்திக் கொள்கின்றனர்.
முக்கிய செய்திகள்
சினிமா
7 hours ago
சினிமா
7 hours ago
சினிமா
7 hours ago
சினிமா
9 hours ago
சினிமா
10 hours ago
சினிமா
22 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago