சென்றாயனுடன் நேர்மையற்ற ஆட்டம் நடத்தியதால் ஐஸ்வர்யா மீது பார்வையாளர்கள் கோபத்தில் உள்ளனர் இதனால் நாளை ஐஸ்வர்யா வெளியேற்றப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பிக் பாஸ் நிகழ்ச்சியில் 16 பேரில் பாதிப்பேர் வெளியேறிய நிலையில் இந்த வாரம் எட்டுப்பேர்களே எஞ்சியுள்ளனர். ஐஸ்வர்யா, யாஷிகா, மகத் கூட்டணியில் மகத் வெளியேற்றப்பட்டவுடன் ஐஸ்வர்யாவும், யாஷிகாவும் ஆடிப்போய்விட்டனர்.
எட்டுப்பேரே உள்ள குடும்பத்தில் ஆரம்பத்தில் நெருக்கம் காணப்பட்டது. ஆனால் புதிதாக வந்த விஜயலட்சுமி முதலில் ஐஸ்வர்யாவுடன் மோதினார், பின்னர் தற்போது மும்தாஜுடன் மோதுகிறார். அவர்களது வாக்குவாதத்தால் பிக்பாஸ் வீடு களை கட்டுகிறது.
நாமினேசன் ப்ராசஸை வித்தியாசமாக நடத்திய பிக் பாஸ் புதிய முறையை கடந்த வாரம் அளித்தார். அதன்படி ஒவ்வொரு உறுப்பினரும், தாங்கள் நாமினேசன் செய்யும் நபர்கள் மூன்று பேரை அழைத்து நான் ஏன் உங்களை வெளியேற்ற விரும்புகிறேன் என்று கூற வேண்டும்.
அதற்கு சம்பந்தப்பட்ட நபர் அவரை கன்வின்ஸ் செய்ய வேண்டும். இதில் ஐஸ்வர்யா பலராலும் நாமினேட் செய்யப்பட்டார். உடன் சென்றாயன், பாலாஜி, விஜயலட்சுமி, மும்தாஜ் உள்ளிட்டோரு நாமினேட் ஆனார்கள்.
பொதுவாக பொதுமக்கள் அபிப்ராயம் ஐஸ்வர்யா மற்றும் யாஷிகா மீது நன்றாக இல்லை. இதில் பல வாரங்கள் இருவரும் தப்பித்தே வருகின்றனர். இந்தவாரம் ஐஸ்வர்யா சிக்கினார். அவரது தாயார் வந்து மன்னிப்பு கேட்டதும் ஐஸ்வர்யா மீது பார்வையாளர்களுக்கு பரிதாபம் ஏற்பட்டது.
ஆனால் நாமினேசன் ஆன பின்னர் அடுத்த டாஸ்க்கான அடுத்த வாரத்திற்கான டாஸ்க்கான நேரடி எவிக்ஷனிலிருந்து தப்பிக்க சென்றாயனை சிவப்பு டை அடிக்க ஒப்புக்கொள்ள வைக்கவேண்டும் என்கிற டாஸ்க்கை சென்றாயனிடம் நேர்மையற்ற முறையில் விளையாடி ஏமாற்றி தன்னை காப்பாற்றிக்கொள்ளப் பார்த்தார்.
இதைப் போட்டியாளர்கள் கண்டுபிடித்து விட்டனர். சென்றாயனும் பெருந்தன்மையாக நீ உண்மையைச் சொல்லி கேட்டிருந்தாலே நான் செய்திருப்பேனே தங்கம் ஏன் இப்படி செய்தாய் என்று கேட்க ஐஸ்வர்யா அப்போதும் மழுப்பினார். இதில் விஜயலட்சுமிக்கும் ஐஸ்வர்யாவுக்கும் மோதல் ஏற்பட்டது.
இது பார்வையாளர்கள் மத்தியில் ஐஸ்வர்யாவின் மதிப்பைக் குறைத்தது. அவரது சக போட்டியாளர்களான மும்தாஜ், சென்றாயன், பாலாஜி, விஜயலட்சுமி ஆகியோரைவிட அவர் பின்தங்கியுள்ளார். இடையில் ரித்விகாவுக்காக மும்தாஜ் தலையில் பச்சை டை அடிக்க முடியாது என்று மறுத்தபோது அவரது மரியாதை குறைந்தது.
வெளியேறும் லிஸ்ட்டில் ஐஸ்வர்யாவுக்கு மிக அருகில் வந்தார். ஆனால் ஐஸ்வர்யா மீண்டும் ஆட்டம் போட்டதும், விஜயலட்சுமி, ஜனனி, பாலாஜி, ரித்விகா கூட்டணி அமைத்து மும்தாஜை ஓரங்கட்டுவதும் அவருக்கு மீண்டும் சிம்பதியை உருவாக்கி காப்பாற்றியுள்ளது.
இதனால் ஐஸ்வர்யா நாளை வெளியேற்றப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
முக்கிய செய்திகள்
சினிமா
3 hours ago
சினிமா
22 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago