கோவா பட விழா​வில் ‘ஆசான்’ குறும்​படம்!

By செய்திப்பிரிவு

திரைப்பட இயக்​குநரும் நடிகருமான இ.வி.கணேஷ்பாபு, இயக்கி​யுள்ள ஆசான் என்ற குறும்​படம் கோவா​வில் நடைபெறும் 55-வது இந்திய சர்வதேச திரைப்பட விழா​வில் திரை​யிடத் தேர்வு செய்யப்பட்டுள்​ளது. இதில் ராமன் அப்துல்லா, தஞ்சை அமலன் ஆகியோர் நடித்​துள்ளனர்.

மலைமேல் அய்யனார் மூவிஸ் சார்​பில் ஜி.வனிதா தயாரித்​துள்ள இந்தக் குறும்​படத்​துக்கு காந்த் தேவா இசை அமைத்​துள்ளார். என்.கே.ராஜராஜன் ஒளிப்​ப​திவு செய்​துள்ளார். இந்தப் படத்தை எழுதி இயக்கி நாயகனாக நடித்​துள்ள இ.வி.கணேஷ்பாபு கூறும்​போது, “கோவா பட விழா​வில் எனது குறும்​பட​மும் பங்கேற்​ப​தில் மகிழ்ச்சி. வரும் 23-ம் தேதி இந்தப் படம் திரை​யிடப்​படு​கிறது.

மாணவர்கள் செய்​யும் குற்​றத்​துக்கு அவர்​களைத் தண்டிப்பதை விட, தவறை உணரச் செய்​வதன் மூலம் அவர்கள் வாழ்வை, ஆசிரியரால் உயர்த்த முடி​யும் என்ற கருத்தை மையமாகக் கொண்டு இக்குறும்​படம் உருவாக்​கப்​பட்​டுள்​ளது” என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

4 hours ago

சினிமா

4 hours ago

சினிமா

4 hours ago

சினிமா

4 hours ago

சினிமா

20 hours ago

சினிமா

20 hours ago

சினிமா

21 hours ago

சினிமா

22 hours ago

சினிமா

22 hours ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

மேலும்