ஸ்ரீஸ்ரீ ரவிசங்கராக நடிப்பது யார்?

By செய்திப்பிரிவு

வாழும் கலை அமைப்பின் நிறுவனர் ஸ்ரீஸ்ரீ ரவிசங்கர் வாழ்க்கையில் நடந்த சம்பவங்களை மையமாக வைத்து சர்வதேசப் படம் ஒன்று உருவாகிறது. த்ரில்லர் பாணியில் உருவாகும் இதை இந்தியில் வெளியான பதான், வார், ஃபைட்டர் படங்களை இயக்கிய சித்தார்த் ஆனந்த் இயக்குகிறார். மகாவீர் ஜெயின் தயாரிக்கிறார்.

கொலம்பியாவில் அரசுக்கும், புரட்சியாளர்களுக்கும் 52 ஆண்டுகளாக உள்நாட்டுப் போர் நடந்து வந்தது. இந்தப் போர், அமைதிப் பேச்சுவார்த்தை மூலம் கடந்த 2016-ம் ஆண்டு முடிவுக்கு வந்தது. இதற்கு முக்கிய காரணமாக இருந்தவர், வாழும் கலை அமைப்பின் நிறுவனர் ஸ்ரீஸ்ரீ ரவிசங்கர். அவரின் அந்த அனுபவத்தின் அடிப்படையில் இந்தப் படம் உருவாகிறது.

இந்திய மொழிகள் மற்றும் ஆங்கிலம், ஸ்பானிஷ் உட்பட பல்வேறு மொழிகளில் இந்தப் படம் வெளியாக இருக்கிறது. இதில் ஸ்ரீஸ்ரீ ரவிசங்கர் கதாபாத்திரத்தில் நடிக்க வைக்க பல்வேறு நடிகர்களை யோசித்தனர். இந்நிலையில் இந்தி நடிகர் விக்ராந்த் மாசே நடிக்க இருப்பதாகக் கூறப்படுகிறது. இவர் ‘12-த் பெயில்’ படம் மூலம் பரவலாகக் கவனிக்கப்பட்டவர். இந்தப் படத்தில் வெளிநாட்டு நடிகர்கள் சிலரும் நடிக்க இருக்கின்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

4 hours ago

சினிமா

7 hours ago

சினிமா

7 hours ago

சினிமா

8 hours ago

சினிமா

9 hours ago

சினிமா

9 hours ago

சினிமா

10 hours ago

சினிமா

11 hours ago

சினிமா

11 hours ago

சினிமா

12 hours ago

சினிமா

16 hours ago

சினிமா

16 hours ago

சினிமா

22 hours ago

சினிமா

22 hours ago

சினிமா

22 hours ago

மேலும்