சென்னை: விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சி, சூப்பர் சிங்கர். கடந்த 10 வருடங்களைக் கடந்துள்ள இந்நிகழ்ச்சி மூலம் பல பாடகர்கள், திரையுலகில் அறிமுகமாகியுள்ளனர். மாற்றுத்திறனாளிகள், ஏழ்மை நிலையில் இருக்கும் திறமையாளர்கள் பலர் இந்நிகழ்ச்சி மூலம் வெளியுலகிற்கு அறிமுகப்படுத்தப் பட்டுள்ளனர்.
சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி சீனியர், ஜுனியர் என இளைஞர்களுக்கும், சிறு வயதினருக்குமாக நடைபெறுகிறது. இந்நிகழ்ச்சி மூலம் அறிமுகமான 30 க்கும் மேற்பட்ட பாடகர்கள் 13-க்கும் மேற்பட்ட இசையமைப்பாளர்களின் இசையில், 250-க்கும் மேற்பட்ட பாடல்களைப் பாடியுள்ளனர். ஜூனியரில், பூவையார், நித்யஸ்ரீ, ஹரிப்பிரியா, பிரியங்கா, பிரகதி குரு பிரசாத் என பல திறமையாளர்களும் சீனியர் நிகழ்ச்சி மூலம் அறிமுகமான பூஜா வைத்தியநாத், சத்திய பிரகாஷ், திவாகர், செந்தில் கணேஷ், ரக்ஷிதா சுரேஷ், ஷாம் விஷால், ஷிவாங்கி, யோகி சேகர், ஆதித்யா ஆர்கே ஆகியோரும் தென்னிந்தியத் திரைத்துறையில் பாடி வருகின்றனர். இந்நிகழ்ச்சி ஒரு போட்டியாக மட்டுமல்லாமல் , திறமையால் ஒளிரும் பலருக்கு மாற்றம் தந்து வருவதாக, விஜய் தொலைக்காட்சி தெரிவித்துள்ளது.
முக்கிய செய்திகள்
சினிமா
6 mins ago
சினிமா
5 hours ago
சினிமா
5 hours ago
சினிமா
5 hours ago
சினிமா
5 hours ago
சினிமா
22 hours ago
சினிமா
22 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago