அயர்ன்மேன் 15 ஆண்டுகள் | சூப்பர்ஹீரோ ரசிகர்களுக்கு புத்துயிர் கொடுத்த கதாபாத்திரம்

By செய்திப்பிரிவு

2008ஆம் ஆண்டு இதே நாளில் (மே 2) தான் மார்வெல் நிறுவனத்தின் அயர்ன்மேன் திரைப்படம் வெளியானது. சூப்பர்ஹீரோ படங்கள் மட்டுமின்றி ஒட்டுமொத்த ஹாலிவுட் சினிமாவையுமே புரட்டிப் போடப் போகும் படம் இது என்று அப்போது யாரும் கணித்திருக்க சாத்தியமில்லை. இந்தியாவில் அப்போது வரை சூப்பர்ஹீரோக்கள் என்றாலே சூப்பர்மேன், பேட்மேன் போன்ற டிசி கதாபாத்திரங்கள் மட்டும்தான் ரசிகர்களுக்கு பரிச்சயம். ஸ்பைடர்மேன், ஹல்க் ஆகிய கதாபாத்திரங்கள் பிரபலமாகியிருந்தாலும் அவை மார்வெல் கதாபாத்திரங்கள் என்பது பலருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. இந்த சூழலை தலைகீழாக மாற்றியது அயர்ன்மேன் திரைப்படம் தான்.

எந்தவித எதிர்பாப்புமில்லாமல் சென்று பார்த்த ரசிகர்களுக்கு ஒரு மிகச்சிறந்த திரையரங்க அனுபவத்தை கொடுத்த இப்படம் உலகம் முழுவது 600 மில்லியன் டாலர்களை வசூலித்து அந்த ஆண்டின் நம்பர் ஒன் திரைப்படமாக மாறியது. இதுவே அதலபாதாளத்தில் சென்று கொண்டிருந்த மார்வெல் நிறுவனத்தின் தலையெழுத்தை ஒட்டுமொத்தமாக மாற்றியது. ஜான் ஃபேவரூ இயக்கிய இப்படம், அமெரிக்கன் ஃபிலிம் இன்ஸ்டிட்யூட்டின் மிகச்சிறந்த 10 படங்களில் ஒன்றாக தேர்வானது. இரண்டு ஆஸ்கர் விருதுகளையும் பெற்றது.

இப்படத்தின் வெற்றிக்கு மிக முக்கிய காரணம், அயர்ன்மேன் பாத்திரத்துகென்றே அளவெடுத்து செய்தது போல இருந்த நாயகன் ராபர்ட் டவுனி ஜூனியர் தான். காமிக்ஸ் ரசிகர்களின் கண்முன்னே அயர்மேன் கதாபாத்திரத்தை கொண்டு வந்து நிறுத்தினார்.
அயர்மேன் கதாபாத்திரத்தை உருவாக்கியவரும், மார்வெல் காமிக்ஸின் பிதாமகனுமான மறைந்த ஸ்டான் லீ ஒருமுறை ராபர்ட் டவுனி ஜூனியர் குறித்து பேசும்போது, ’அயர்ன்மேன் கதாபாத்திரத்துக்காகவே பிறந்தவர்’ என்று சிலாகித்தார்.

அயர்ன்மேன் முதல் பாகத்தின் இறுதியில் நிக் ஃப்யூரி (சாமுவேல் ஜாக்சன்) தோன்றி மற்ற சூப்பர்ஹீரோக்களை இணைக்கும் யோசனை குறித்து அயர்ன்மேனிடம் சொல்வார். அதுதான் மார்வெல் சினிமாட்டிக் யுனிவர்ஸின் தொடக்கப்புள்ளி. அதன் பிறகு நடந்தது வரலாறு.

மார்வெல் நிறுவனத்தின் போட்டி நிறுவனமான டிசி காமிக்ஸும் இதே பாணியை கையில் எடுத்தது. போஸ்ட் கிரெடிட் சீன்கள், வெவ்வேறு சூப்பர்ஹீரோக்களை ஒன்றிணைப்பது, மல்டி யுனிவர்ஸ் என பல உத்திகளை மார்வெல் நிறுவனம் தனது சூப்பர்ஹீரோ படங்களில் அறிமுகப்படுத்தியது. இது சூப்பர்ஹீரோ படங்களை தாண்டி மற்ற நிறுவனங்களின் படங்களிலும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. காங் vs காட்ஸில்லா உள்ளிட்ட படங்களில் இந்த மல்டி யுனிவர்ஸ் கான்செப்ட் கையாளப்பட்டது. அந்த வகையில் ஹாலிவுட் படங்களின் போக்கை மாற்றியதன் தொடக்கப்புள்ளியாக அயர்ன்மேன் திரைப்படம் அமைந்துள்ளது. இந்தியாவில் குறிப்பாக தமிழகத்திலன் கோலிவுட்டில் லோகேஷ் கனகராஜ் கையில் எடுத்திருப்பதும் இதே மல்டி யுனிவர்ஸ் கதைக்களத்தை தான். சமீபத்தில் பாலிவுட்டில் வெளியான பதான் படத்திலும் இந்த பாணி கையாளப்பட்டுள்ளது. இவை அனைத்துக்கும் அயர்ன்மேன் திரைப்படமே முன்னோடி.

அயர்ன்மேன் முதல் பாகத்தைத் தொடர்ந்து அயர்ன்மேன் 2, அயர்ன்மேன் 3, கேப்டன் அமெரிக்கா சிவில் வார், அவெஞ்சர்ஸ் உள்ளிட்ட பல்வேறு திரைப்படங்களில் தோனிய அயர்ன்மேன் கதாபாத்திரம் 2019ஆம் ஆண்டு வெளியான அவெஞ்சர்ஸ் எண்ட்கேம் படத்தின் இறுதியில் இறப்பது போல காட்டப்பட்டது ரசிகர்கள் மத்தியில் பெரும் கலக்கத்தை ஏற்படுத்தியது.

தற்போது மார்வெல் படங்கள் முன்பு போல பாக்ஸ் ஆபீஸில் பெரிதாக சோபிக்காததால் மீண்டும் அயர்ன்மேன் கதாபாத்திரத்தை மல்டிவெர்ஸ், டைம் டிராவல் ஏதேனும் ஒரு கம்பிகட்டும் கதையை சொல்லி மீண்டும் கொண்டு வரலாமா என்று ஆலோசித்து வருகிறது மார்வெல் நிறுவனம். இது இன்னும் உறுதியாகவில்லை என்றாலும் இத்தகவலை இப்போதே சமூக வலைதளங்களில் கொண்டாடத் தொடங்கி விட்டனர் அயர்ன்மேன் ரசிகர்கள்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

1 hour ago

சினிமா

1 hour ago

சினிமா

1 hour ago

சினிமா

1 hour ago

சினிமா

2 hours ago

சினிமா

2 hours ago

சினிமா

14 hours ago

சினிமா

15 hours ago

சினிமா

16 hours ago

சினிமா

16 hours ago

சினிமா

17 hours ago

சினிமா

18 hours ago

சினிமா

18 hours ago

சினிமா

23 hours ago

சினிமா

23 hours ago

மேலும்