95-வது ஆஸ்கர் விருது விழாவில் ‘ஆர்ஆர்ஆர்' படத்தை பாலிவுட் திரைப்படம் என குறிப்பிட்ட தொகுப்பாளர்!

By செய்திப்பிரிவு

அகாடமி விருது எனப்படும் 95-ஆவது ஆஸ்கர் விருது வழங்கும் விழா அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸில் நடைபெற்றுவருகிறது. லாஸ் ஏஞ்சல்ஸில் உள்ள டால்பி தியேட்டரில் 95வது அகாடமி விருதுகளை ஜிம்மி கிம்மல் தொகுத்து வழங்கி வருகிறார்.

விழாவின் தொடக்க உரையில் ‘ஆர்.ஆர்.ஆர்' படத்தை பாலிவுட் திரைப்படம் என குறிப்பிட்ட, விழாவின் தொகுப்பாளர் ஜிம்மி கிம்மல்.

முதல் ஆஸ்கர் விருதாக சிறந்த அனிமேஷன் திரைப்படத்துக்கு வழங்கப்பட்டது.

சிறந்த அனிமேஷன் திரைப்படத்திற்கான ஆஸ்கர் விருதை தட்டிச் சென்றது 'கில்லர்மோ டெல் டோரோவின் பினோக்கியோ' திரைப்படம்.

இதேபோல், Everything All At Once படத்தில் நடித்த கி ஹு ஹுவான் சிறந்த துணை நடிகர் பிரிவிலும், ஜேமி லீ கர்டிஸ் சிறந்த துணை நடிகை பிரிவிலும் ஆஸ்கர் விருதினை வென்றனர்.

சிறந்த ஒளிப்பதிவிற்கான ஆஸ்கர் விருது ஆல் கொயட் ஆன் த வெஸ்டர்ன் பிரண்ட் (All Quiet on the Western Front) படத்திற்காக ஜேம்ஸ் ஃப்ரெண்ட்க்கு வழங்கப்பட்டது.

சிறந்த லைவ் ஆக்‌ஷன் குறும்படத்துக்கான ஆஸ்கர் விருதை 'ஆன் ஐரிஷ் குட்பை' (An Irish Goodbye) படம் வென்றது.

இந்த ஆண்டின் சிறந்த ஆவணப்படத்திற்கான ஆஸ்கர் விருது 'நவால்னி' (Navalny) படத்துக்கு வழங்கப்பட்டது. இதேபிரிவில் இடம்பெற்ற இந்திய திரைப்படமான ஆர் தட் ப்ரீத்ஸ் படம் ஆஸ்கர் விருது வெல்லவில்லை.

சிறந்த ஒப்பனைக்கான ஆஸ்கர் விருது 'தி வேல்' படத்திற்கு கிடைத்தது.

சிறந்த ஆடை வடிவமைப்புக்கான ஆஸ்கர் விருது பிளாக் பந்தர் படத்துக்கு வழங்கப்பட்டது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE