‘கிளாடியேட்டர்’ நடிகருக்கு உணவகத்தில் அனுமதி மறுப்பு

By செய்திப்பிரிவு

நியூசிலாந்தில் பிறந்து ஆஸ்திரேலியாவில் வசித்து வரும் நடிகர் ரஸ்ஸல் குரோவ் (Russell Crowe). ஹாலிவுட் படமான, ‘கிளாடியேட்டர்’ படத்தில் சிறப்பாக நடித்ததற்காக ஆஸ்கர் விருதைப் பெற்றவர். ‘தி இன்சைடர்’, ‘எ பியூட்டிஃபுல் மைண்ட்’, ‘அமெரிக்கன் கேங்ஸ்டர்’ உட்பட பல படங்களில் நடித்துள்ளார்.

உலகம் முழுவதும் ரசிகர்களைக் கொண்ட இவர், தனது தோழி பிரிட்னியுடன் மெல்போர்னில் உள்ள ‘மிஸ்டர் மியாகி' என்ற உணவகத்துக்குச் சென்றார். அவர்கள் ‘டிரெஸ் கோடு’ பின்பற்றவில்லை என்று கூறி, அனுமதிக்க மறுத்துவிட்டனர். இதனால் வேறு உணவகத்துக்குச் சென்றனர்.

இதனால் அந்த உணவகத்தை சமூக வலைதளங்களில் ரசிகர்கள் விமர்சித்து வருகின்றனர். இந்நிலையில் அந்த உணவக உரிமையாளர் கிறிஸ்டியன் கிளேன் கூறும்போது, “நீங்கள் யாராக இருந்தாலும் ரஸ்ஸல் குரோவாகவே இருந்தாலும் பரவாயில்லை. நாங்கள் ‘டிரெஸ் கோடு’ வைத்திருக்கிறோம். குரோவுக்கான சேவையை மறுத்த எங்கள் ஊழியருக்கு, அவர் ‘கிளாடியேட்டர்' நடிகர் என்பது தெரியாது’’ என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

11 hours ago

சினிமா

13 hours ago

சினிமா

17 hours ago

சினிமா

15 hours ago

சினிமா

16 hours ago

சினிமா

17 hours ago

சினிமா

17 hours ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

மேலும்