“இந்திய திரைப்படங்களை ரசிக்கிறேன்” - ஜேம்ஸ் கேமரூன் 

By செய்திப்பிரிவு

“இந்திய திரைப்படங்களை ரசிக்கிறேன். எனது திரைப்படங்களில் பாடல்கள் மற்றும் நடனக் காட்சிகள் இல்லாததே இந்திய படங்களுக்கும் எனது படங்களுக்குமான வித்தியாசம்” என ஹாலிவுட் இயக்குநர் ஜேம்ஸ் கேமரூன் தெரிவித்துள்ளார்.

டைட்டானிக் திரைப்படம் வெளியாகி 25 ஆண்டுகளை கடந்துள்ள நிலையில், உலகம் முழுவதும் 3டி முறையில் அப்படம் மறுவெளியீடு செய்யப்பட்டு வருகிறது, இந்த நிலையில் பாம்பே டைம்ஸ் நிறுவனத்திற்கு நேர்காணல் ஒன்றை அளித்துள்ள ஜேம்ஸ் கேமரூனிடம் ”உங்கள் திரைப்படத்திற்கும் இந்திய திரைப்படங்களுக்கும் உள்ள ஒற்றுமை என்ன?” என்ற கேள்வி எழுப்பப்பட்டது.

இதற்கு பதிலளித்த ஜேம்ஸ் கேமரூன், “எனது திரைப்படங்களில் பாடல்கள் மற்றும் நடனக்காட்சிகள் இல்லாததே இரண்டிற்கும் உள்ள வித்தியாசம்’’ என்றார். குடும்பம், நண்பர்கள், சுற்றத்தார்களுக்கு செய்ய வேண்டிய கடமைகளை மையாக வைத்து எடுக்கப்படும் இந்திய திரைப்படங்களை தான் ரசிப்பதாகவும், ராஜமௌலி இயக்கத்தில் வெளியான ‘ஆர்ஆர்ஆர்’ திரைப்படத்தை பார்த்தது வியந்ததாகவும் ஜேம்ஸ் கேமரூன் தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE