ராஜமௌலியின் ‘ஆர்ஆர்ஆர்’ படத்தை பாருங்கள் என அமெரிக்க முன்னாள் அதிபர் பாரக் ஓபாமாவுக்கு ரசிகர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
அமெரிக்க முன்னாள் அதிபர் பாரக் ஒபாமா தனது சமூக வலைதள பக்கத்தில் இந்தாண்டில் அவருக்கு பிடித்தமான படங்கள், புத்தகங்கள், பாடல்கள் ஆகியவற்றை பதிவிட்டுள்ளார். ஒபாமா கடந்த சில வருடங்களாக ஒவ்வொரு ஆண்டு இறுதியிலும் தனக்குப் பிடித்த கலைப் படைப்புகளின் பட்டியலை சமூக ஊடகங்களில் பகிர்ந்து வருகிறார். அந்த வகையில் ஒபாமா தனது ட்விட்டர் பக்கத்தில், ‘2022ல் பராக் ஒபாமாவுக்கு பிடித்த படங்கள்’ ( ‘Barack Obama’s favourite films of 2022’) என்ற தலைப்புடன் கூடிய புகைப்படம் ஒன்றை பதிவிட்டுள்ளார்.
அதில், “இந்த வருடம் நான் சில சிறந்த திரைப்படங்களைப் பார்த்தேன். எனக்குப் பிடித்த சில திரைப்படங்கள் இதோ. நான் எதையாவது தவறவிட்டேனா?" எனக் கூறி, கொரியன் ப்ளாக் பஸ்டர் படமான ‘எவ்ரிதிங் எவ்ரிவேர் ஆல் அட் ஒன்ஸ்’ (Everything Everywhere All At Once), ப்ரெஞ்ச் படமான ‘பெட்டிடி மாமன்’ (Petite Maman), ‘டாப் கன்: மேவரிக்’, ‘ஆஃப்டர் யாங்’, ‘தார், தி வுமன் கிங்’, ‘ஹேப்பனிங்’, ‘டில்’, ‘தி குட் பாஸ்’, ‘எ ஹீரோ’, ‘ஹிட் தி ரோட்’, உள்ளிட்ட பல்வேறு படங்களின் பட்டியலை பகிர்ந்துள்ளார். அவரது இந்த பதிவில் கமென்ட் செய்யும் ரசிகர்களும், சில திரை விமர்சகர்களும் மற்ற சில படங்களை பரிந்துரைத்துள்ளனர். அதில் ராஜமௌலியின் ‘ஆர்ஆர்ஆர்’ படத்தின் பரிந்துரையை பலரும் குறிப்பிட்டுள்ளனர்.
இந்நிலையில் ஒபாமாவுக்கு விமர்சகர் பிரையன் ட்ரூட், இயக்குநர் டான் கரிலோ லெவி உள்ளிட்ட பலரும் பல்வேறு படங்களைப் பரிந்துரைத்துள்ளனர். ரசிகர்கள் சிலர், ‘மிஸ்டர் பிரசிடெண்ட், ‘ஆர்ஆர்ஆர்’ படத்தை பார்க்கவும். உங்களுக்கு அது பிடிக்கும்” என்று தெரிவித்துள்ளனர்.
ஆஸ்கர் விருது இறுதி சுற்றுக்கான பரிந்துரை பட்டியலில் அசல் பாடல் பிரிவில் ‘ஆர்ஆர்ஆர்’ படத்தில் இடம்பெற்ற ‘நாட்டு கூத்து’ பாடல் அண்மையில் இடம்பெற்றது குறிப்பிடத்தக்கது.
முக்கிய செய்திகள்
சினிமா
17 mins ago
சினிமா
22 mins ago
சினிமா
1 hour ago
சினிமா
2 hours ago
சினிமா
2 hours ago
சினிமா
2 hours ago
சினிமா
3 hours ago
சினிமா
4 hours ago
சினிமா
5 hours ago
சினிமா
9 hours ago
சினிமா
9 hours ago
சினிமா
14 hours ago
சினிமா
15 hours ago
சினிமா
15 hours ago
சினிமா
15 hours ago