இந்திய அளவில் ரூ.50 கோடியை வசூலித்த அவதார் தி வே ஆஃப் வாட்டர் 

By செய்திப்பிரிவு

ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில் நேற்று (டிசம்பர் 16) வெளியான ‘அவதார் தி வே ஆஃப் வாட்டர்’ திரைப்படம் இந்திய அளவில் ரூ.50 கோடியை வசூலித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில் கடந்த 2009 ஆம் ஆண்டு வெளியாகி, உலகெங்கும் மாபெரும் வெற்றியைப் பதிவு செய்த படம் ‘அவதார்’. இரண்டு மணிநேரம் 40 நிமிடங்கள் நம்மை வேறு உலகக்கு அழைத்து சென்றிருந்தது இத்திரைப்படம். ரூ.1000 கோடி செலவில் உருவான இப்படம் உலகம் முழுவதும் ரூ.280 கோடி அமெரிக்க டாலர்களை வசூலித்தது. அதுவரை வேறு எந்தத் திரைப்படமும் நிகழ்த்த முடியாத வசூல் சாதனையை இத்திரைப்படம் நிகழ்த்தியது.

கிட்டத்தட்ட 13 ஆண்டுகள் கழித்து இந்தப் படத்தின் இரண்டாம் பாகம் நேற்று டிச.16 வெளியானது. முதல் பாகத்தைப்போல மிகச் சிறப்பான காட்சி அனுபவத்துடன் தயாரிக்கப்பட்ட இத்திரைப்படம் உலகம் முழுவதும் 160 மொழிகளில் வெளியானது. உலகம் முழுக்க 52ஆயிரம் திரையரங்குகளில் படம் வெளியிடப்பட்டது.

இந்நிலையில் படம் இந்திய அளவில் ரூ.50 கோடியை வசூலித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இருப்பினும் கடந்த 2019-ம் ஆண்டு வெளியான ‘அவெஞ்சர்ஸ் என்ட் கேம்’ படத்தின் ரூ.65 கோடி வசூலை முறியடிக்கவில்லை என கூறப்படுகிறது. மேலும் ரூ.3ஆயிரம் கோடியில் உருவான இப்படம் உலக அளவில் படம் ரூ.2.9 பில்லியன் அமெரிக்க டாலரை வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE