சினிமா துறையின் உயரிய விருதான ஆஸ்கர் விருதுகள், ஒவ்வொரு வருடமும் அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் வழங்கப்பட்டு வருகிறது. இந்த விழாவை தொகுத்து வழங்குவதும் கவுரவமானதாகக் கருதப்படும். கடந்த முறை நடந்த விழாவை, கிறிஸ் ராக் தொகுத்து வழங்கினார். அவரை, வில் ஸ்மித் கன்னத்தில் அறைந்தது பரபரப்பாகப் பேசப்பட்டது. இதனால் அடுத்த வருட விழாவைத் தொகுத்து வழங்க கிறிஸ் ராக் மறுத்துவிட்டார்.
இந்நிலையில், 95 -வது ஆஸ்கர் விருது விழா அடுத்த ஆண்டு மார்ச் 12-ம் தேதி நடக்கிறது. இந்த விழாவை அமெரிக்க காமெடியன் ஜிம்மி கிம்மெல் தொகுத்து வழங்குகிறார். இவர் ஏற்கனவே 2017 மற்றும் 2018ம் ஆண்டுகளில் இந்த விழாவை தொகுத்து வழங்கி இருந்தார். “மூன்றாவது முறையாக ஆஸ்கர் விழாவை தொகுத்து வழங்க அழைக்கப்பட்டதை பெருமையாக கருதுகிறேன்” என்று ஜிம்மி கிம்மெல் தெரிவித்துள்ளார்.
முக்கிய செய்திகள்
சினிமா
25 mins ago
சினிமா
37 mins ago
சினிமா
2 hours ago
சினிமா
2 hours ago
சினிமா
3 hours ago
சினிமா
3 hours ago
சினிமா
4 hours ago
சினிமா
7 hours ago
சினிமா
7 hours ago
சினிமா
8 hours ago
சினிமா
8 hours ago
சினிமா
8 hours ago
சினிமா
19 hours ago
சினிமா
20 hours ago
சினிமா
22 hours ago