டிசம்பர் 16-ம் தேதி உலகம் முழுவதும் வெளியாக உள்ள ‘அவதார்’ படத்தின் இரண்டாம் பாகமான 'அவதார் தி வே ஆஃப் வாட்டர்' (Avatar: The Way of Water) படத்தின் ட்ரெய்லர் தற்போது வெளியாகியுள்ளது.
கடந்த 2009-ம் ஆண்டு 1000 கோடி ரூபாய் பொருட்செலவில் உலகம் முழுவதும் வெளியானப் படம் 'அவதார்'. வரலாற்று சயின்ஸ் பிக்ஷனாக உருவான இந்தப் படம், சினிமா உலகை அடுத்த தளத்திற்கு கொண்டு சென்றது மட்டுமல்லாமல், வசூல் ரீதியாக சாதனை படைத்தது. இதையடுத்து இந்தப் படத்தின் சீக்குவல் எனப்படும், அடுத்தடுத்த பாகங்கள், குறிப்பிட்ட இடைவெளியில் வெளியாகும் என்று இயக்குநர் ஜேம்ஸ் கேமரூன் கூறியிருந்தார்.
பிரம்மாண்டமான காட்சிகளுடன் 3டி தொழில்நுட்பத்தில் வெளிவரும் 'அவதார்-தி வே ஆஃப் வாட்டர்' திரைப்படம் உலகில் 160 மொழிகளில் ரிலீசாகவுள்ளது. அவதார் திரைப்படம் ஐந்து பாகங்களாக அடுத்தடுத்து வெளிவர உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 13 ஆண்டுகள் கழித்து அவதார் படத்தின் 2-ம் பாகம் டிசம்பர் மாதம் 16-ம் தேதி வெளியாக உள்ள நிலையில் இதன் மூன்றாவது பாகத்தை 2024-ம் ஆண்டு வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது. இந்நிலையில் தற்போது 'அவதார் தி வே ஆஃப் வாட்டர்' திரைப்படத்தின் ட்ரெய்லர் வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது.
ட்ரெய்லர் எப்படி? - அட்டகாசமான காட்சி அனுபவத்தை படக்குழு மீண்டும் திரையில் கொண்டு வந்திருப்பதை ட்ரெய்லர் உறுதி செய்கிறது. கலர்ஃபுல்லான ப்ரேம்களும், விநோத மிருகங்களும், இடையிடையே இழையும் சென்டிமென்ட் காட்சிகளும், நீரோட்டதைப் போன்ற பின்னணி இசையும் படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரிக்கிறது. நிறைய சர்ப்ரைஸ்கள் இருப்பதை உறுதி செய்யும் ட்ரெய்லர் அவதார் உலகத்தில் நம்மை பயணிக்க வைக்க காத்திருப்பதை உணர முடிகிறது. டிசம்பர் 16-ம் தேதி வெளியாகும் படத்தின் மீதான எதிர்பார்ப்பு ட்ரெய்லரால் எகிறியுள்ளது. ட்ரெய்லர் வீடியோ:
» “என்னை மிகவும் ஸ்பெஷலாக உணர வைத்தற்கு நன்றி” - ஷாருக்கான் நெகிழ்ச்சி
» இந்தியில் ‘கேஜிஎஃப்’ முதல் பாகத்தின் வசூல் சாதனையை முறியடித்த ‘காந்தாரா’
முக்கிய செய்திகள்
சினிமா
20 mins ago
சினிமா
32 mins ago
சினிமா
2 hours ago
சினிமா
2 hours ago
சினிமா
3 hours ago
சினிமா
3 hours ago
சினிமா
4 hours ago
சினிமா
7 hours ago
சினிமா
7 hours ago
சினிமா
8 hours ago
சினிமா
8 hours ago
சினிமா
8 hours ago
சினிமா
19 hours ago
சினிமா
20 hours ago
சினிமா
22 hours ago