அமெரிக்காவின் 'வார்னர் பிரதர்ஸ் டிஸ்கவரி' நிறுவனத்திற்கு சொந்தமான 'கார்ட்டூன் நெட்வொர்க்' சேனல் மூடப்படுவதாக தகவல்கள் வெளியான நிலையில் அந்நிறுவனம் இதற்கு மறுப்பு தெரிவித்துள்ளது.
கடந்த 1992-ம் ஆண்டு தொடங்கப்பட்டது 'கார்டூன் நெட்வொர்க்' சேனல். குழந்தைகளுக்கான பிரத்யேக கார்டூன் சேனலான இது 90ஸ் கிட்ஸ்களின் பேவரைட் சேனல். அண்மையில் இந்தச் சேனலை வார்னர் பிரதர்ஸ் டிஸ்கவரி நிறுவனத்துடன் இணைக்கப்போவதாக தகவல்கள் வெளியாகின.
கடந்த சில நாட்களுக்கு முன்னர் 82 அனிமேஷன் ஊழியர்கள் வெளியேற்றப்பட்தால் சேனல் சேவை நிறுத்தப்படுவதாக நெட்டிசன்கள் கவலை கொண்டு இது தொடர்பான ஹேஷ்டேக்குகளையும் ட்ரெண்டாக்கி வந்தனர். பலரும் சோக ஸ்மைலியுடன் தங்கள் வாட்ஸ்அப்களில் கார்டூன் நெட்வொர்க் லோகோவை புகைப்படங்களாக வைத்தனர்.
இந்நிலையில் இது போன்ற வதந்திகளுக்கு கார்டூன் நெட்வொர்க் சேனலே முற்றுப்புள்ளி வைத்துள்ளது. இது தொடர்பாக அதன் அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கத்தில், ''நாங்கள் இன்னும் இறக்கவில்லை. எங்களுக்கு வெறும் 30 வயது தான் ஆகிறது. எங்கள் ரசிகர்களுக்கு, நாங்கள் எங்கும் செல்லப் போவதில்லை. பிரியமான, புதுமையான கார்ட்டூன்களாக உங்கள் இல்லங்களில் நாங்கள் இருந்தோம், எப்போதும் இருப்போம். மேலும் விரைவில்!'' என பதிவிடப்பட்டுள்ளது. இந்த தகவலால் 90ஸ் கிட்ஸ்கள் உற்சாகமடைந்துள்ளனர்.
» இயக்குநர் விக்ரமன் மகன் நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு தொடக்கம்
» ’அப்படியெல்லாம் நான் யோசித்தது கூட இல்லை’ - தேர்தலில் போட்டியிடுவது குறித்து கிருத்திகா உதயநிதி
முக்கிய செய்திகள்
சினிமா
2 hours ago
சினிமா
2 hours ago
சினிமா
2 hours ago
சினிமா
2 hours ago
சினிமா
18 hours ago
சினிமா
19 hours ago
சினிமா
19 hours ago
சினிமா
20 hours ago
சினிமா
21 hours ago
சினிமா
22 hours ago
சினிமா
22 hours ago
சினிமா
23 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago