இயக்குனர் ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில் உருவான திரைப்படம் தான் ‘அவதார்’. கடந்த 2009 வாக்கில் வெளியாகி இருந்தது. இந்த படம் தற்போது 4K 3D HDR தரத்தில் ரீமாஸ்டர் செய்யப்பட்டுள்ளது. அதன் போஸ்டரை பகிர்ந்துள்ளார் ஜேம்ஸ் கேமரூன்.
எதிர்வரும் செப்டம்பர் 23-ம் தேதி இந்த புதிய பிரிண்டில் அவதார் படம் வெளியாக உள்ளது. இது குறுகிய காலத்திற்கு மட்டுமே திரையரங்குகளில் திரையிடப்பட உள்ளதாவும் படக்குழு தெரிவித்துள்ளது. அடுத்த அத்தியாயம் வரும் வரையில் இதனை கண்டு மகிழுங்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த படம் உலக அளவில் பலத்த வரவேற்பை பெற்றது. பாக்ஸ் ஆபிஸில் சுமார் 2.85 பில்லியன் அமெரிக்க டாலர்களை இந்த படம் வசூலித்துள்ளது. சிறந்த ஒளிப்பதிவு, கலை அமைப்பு மற்றும் விஷுவல் எபெக்ட்ஸ் என மூன்று பிரிவுகளில் ஆஸ்கர் விருது வென்றுள்ளது இந்த திரைப்படம்.
இதன் இரண்டாம் பாகமான ‘அவதார்: தி வே ஆஃப் வாட்டர்’ வரும் டிசம்பர் மாதம் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன் அடுத்தடுத்த பாகங்கள் 2 ஆண்டுகள் இடைவெளியில் 2028 வரையில் வெளியாகும் எனவும் படக்குழு தெரிவித்துள்ளது. மனிதர்களுக்கும், பண்டோரா எனும் வேற்றுலகத்தை சேர்ந்த நாவி மக்களுக்கும் இடையில் நடைபெறும் சம்பவங்கள் தான் இந்த படத்தின் கதை.
Before our next chapter begins, experience Avatar in remastered 4K 3D HDR in theaters September 23rd for a limited time. pic.twitter.com/hjSaKNFXkl
— James Cameron (@JimCameron) August 23, 2022
முக்கிய செய்திகள்
சினிமா
1 hour ago
சினிமா
1 hour ago
சினிமா
1 hour ago
சினிமா
2 hours ago
சினிமா
2 hours ago
சினிமா
6 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago