பிரான்சில் நடைபெறவுள்ள கேன்ஸ் திரைப்பட விழாவில் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் இயக்கிய 'லி மஸ்க்' திரைப்படம் திரையிடப்படவுள்ளது.
ஆஸ்கார் நாயகனான ஏ.ஆர்.ரஹ்மான் இசையைக் கடந்து '99 சாங்க்ஸ்' திரைப்படம் மூலமாக திரைக்கதை எழுத்தாளராக அறிமுகமானார். இசையை மையப்படுத்தி இயக்கியிருந்த அந்தப் படம் கடந்த 2019-ம் ஆண்டு வெளியானது.
இந்நிலையில், அவர் இயக்குநர் அவதாரத்தையும் எடுத்திருக்கிறார். ஆம்! தனது மனைவி சாய்ராவின் ஒன்லைன் ஐடியாவை திரைக்கதையாக மாற்றி 'லி மஸ்க்' என்ற குறும்படத்தை இயக்கியிருக்கிறார். இந்தப் படம் பிரான்ஸில் நடைபெறவுள்ள கேன்ஸ் திரைப்பட விழாவில் திரையிடப்படவுள்ளது.
» ‘காத்துவாக்குல’ பறந்த கண்ணியம்: ஆண்-பெண் உறவைக் கையாள்வதில் முன்னுதாரண ‘விசித்திரன்’
» பாக்ஸ் ஆபிஸில் ஏமாற்றம் தந்த ரன்வீர் சிங்கின் ‘ஜெயேஷ்பாய் ஜோர்தார்’
36 நிமிடங்களே ஓடக்கூடிய இந்த திரைப்படம் விர்ச்சுவல் ரியாலிட்டி முறையில் உருவாக்கப்பட்டுள்ளது. ஜூலியட் மெர்டினியன் என்ற பெண் தன் வாழ்நாளில் சந்தித்த பல ஆண்களை, அவர்கள் பயன்படுத்தும் வாசனை திரவியத்தை வைத்து எப்படி அடையாளம் காண்கிறாள் என்பதை அடிப்படையாக வைத்து திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது. நோரா அரனிசாண்டர், கை பர்நெட் ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
ஏ.ஆர்.ரஹ்மானும் அவரது மனைவியும் 'லி மஸ்க்' என்ற வாசனை திரவியத்தை மிகவும் விரும்புபவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
முக்கிய செய்திகள்
சினிமா
1 hour ago
சினிமா
1 hour ago
சினிமா
2 hours ago
சினிமா
3 hours ago
சினிமா
4 hours ago
சினிமா
6 hours ago
சினிமா
11 hours ago
சினிமா
12 hours ago
சினிமா
15 hours ago
சினிமா
15 hours ago
சினிமா
15 hours ago
சினிமா
15 hours ago
சினிமா
16 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago