ஆஸ்கர் விருது வென்ற முதல் 2K கிட் -  'நோ டைம் டூ டை' படத்துக்காக பில்லி எலிஷ் புதிய சாதனை

By செய்திப்பிரிவு

லாஸ் ஏஞ்சல்ஸ்: 21-ம் நூற்றாண்டில் பிறந்த 20 வயதே நிரம்பிய 2K கிட் ஆன பாடகி பில்லி எலிஷ் ஆஸ்கர் விருது வென்றுள்ளார்.

94-வது ஆஸ்கர் விருது விழாவில், 21-ம் நூற்றாண்டில் பிறந்த 20 வயதே நிரம்பிய 2K கிட் ஒருவரும் ஆஸ்கர் விருதைச் தட்டிச் சென்றார். அவர் அமெரிக்க பாப் பாடகி பில்லி எலிஷ். கடந்த ஆண்டு வெளிவந்த ஜேம்ஸ் பாண்ட் சீரிஸ் திரைப்படமான 'நோ டைம் டூ டை' படத்துக்கு இசையமைத்தற்காக அவருக்கு விருது வழங்கப்பட்டது. தனது சகோதரர் பினியஸ் ஓ’கன்னல் உடன் இணைந்து பில்லி எலிஷ் 'நோ டைம் டூ டை' படத்திற்கு இசையமைத்திருந்தார்.

படம் வெளியானபோதே இவர்களின் இசை பெரிதும் பேசப்பட்ட நிலையில், இருவரும் ஆஸ்கர் விருதை தட்டிச் சென்றுள்ளனர். இதன்மூலம், 21-ம் நூற்றாண்டில் பிறந்து ஆஸ்கர் விருதை வென்ற முதல் நபர் என்ற பெருமையை பெற்றுள்ளார் பில்லி எலிஷ். விருதை பெற்றபின் உடன்பிறப்புகள் இருவரும் ஒன்றாக, "எங்களின் உத்வேகமாக இருக்கும் எங்களின் பெற்றோருக்கு நன்றி சொல்ல விரும்புகிறோம்" என்று நெகிழ்ச்சியுடன் தெரிவித்தனர்.

முன்னதாக பில்லி எலிஷ், எம்மி மற்றும் கிராமி, மற்றும் கோல்டன் குளோப் விருதையும் வென்றுள்ளார். ஒரே பாடலுக்கு மூன்று விருதுகளை வென்ற முதல் 2K கிட்டும் இவர் தான். பில்லி எலிஷ், தனது 13 வயதில் இருந்தே இசை உலகில் பயணித்து வருகிறார். 2015-ல் இவர் குரலில் வெளிவந்த 'ஓசன் ஐஸ்' (Ocean Eyes) மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. அதன்பிறகு ஹிப் பாப் இசை உலகில் மிகப்பெரிய வளர்ச்சியை கண்டுள்ளார் பில்லி எலிஷ். சகோதரர் பினியஸ் உடன் இணைந்து எலிஷ் வெளியிட்ட அனைத்து ஹிப் பாப் பாடல்களும் மிகப்பெரிய வரவேற்பை பெற்றவை. இன்ஸ்டாகிராமில் அவரை பின்தொடரும் 18 மில்லியன் பாலோயர்களை பார்த்தாலே அவருக்குண்டான வரவேற்பை தெரிந்துகொள்ளலாம்.

அதேநேரம், பில்லி எலிஷ்ஷின் சோகப் பக்கம் ஒன்றும் உள்ளது. அதாவது எலிஷ் தனது சிறுவயது முதல் டூரெட்ஸ் என்று ஒருவகையான மரபு நோயால் பாதிக்கப்பட்டுள்ளார். சில வருடங்கள் முன்பே தனக்கு இப்படி நோய் உள்ளது என்பதை பொதுவெளியில் அறிவித்தார் எலிஷ்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

3 hours ago

சினிமா

3 hours ago

சினிமா

4 hours ago

சினிமா

5 hours ago

சினிமா

5 hours ago

சினிமா

5 hours ago

சினிமா

6 hours ago

சினிமா

7 hours ago

சினிமா

8 hours ago

சினிமா

12 hours ago

சினிமா

12 hours ago

சினிமா

17 hours ago

சினிமா

18 hours ago

சினிமா

18 hours ago

சினிமா

18 hours ago

மேலும்