ஆஸ்கர்; சிறந்த குறும்படத்திற்கான விருதை வென்றார் ரிஸ் அகமத்

By செய்திப்பிரிவு

லாஸ்ஏஞ்சல்ஸ்: சிறந்த குறும்படத்திற்கான ஆஸ்கர் விருது ’The Long Goodbye’ படத்திற்காக, நடிகரும், துணை எழுதாளருமான ரிஸ் அகமதிற்கு வழங்கப்பட்டது.

அகடமி அவார்ட்ஸ் என அழைக்கப்படும் ஆஸ்கர் விருது விழாவின் 94வது ஆண்டு விழா நடைபெறற்றது. மொத்தம் 24 பிரிவுகளுக்கு ஆஸ்கர் விருதுகள் வழங்கப்பட்டன. சிறந்த திரைப்படம், சிறந்த திரைக்கதை, சிறந்த ஒளிப்பதிவு, சிறந்த இயக்கம், சிறந்த நடிகர்கள், சிறந்த ஆடை வடிவமைப்பு, சிறந்த எடிட்டிங், சிறந்த விஷுவல் எஃபெக்ட்ஸ் என பல பிரிவுகளில் வழங்கப்பட்டன.

இதில் சிறந்த குறும்படத்திற்கான ஆஸ்கர் விருது ’The Long Goodbye’ படத்திற்காக அதன் துணை இயக்குனரும், நடிகருமான ரிஸ் அகமத்திற்கு வழங்கப்பட்டது.

விருதை பெற்ற ரிஸ் அகமத் , “ இதுபோன்ற பிளவுபட்ட காலத்தில், ’இவர்கள்’மற்றும் ‘அவர்கள்’இல்லை என்பதை நினைவூட்டுவதே கதையின் பங்கு என்று நாங்கள் நம்புகிறோம். இங்கு ‘நாம்’தான் இருக்கிறது” என்று பேசினார்.

குறும்பட பிரிவில், ஆஸ்கர் விருது பெறும் முதல் முஸ்லிம், ரிஸ் அகமத் என்று கூறப்படுகிறது.

பிரிட்டீஸ் - பாகிஸ்தானியரான ரிஸ் அகமத் கடந்த ஆண்டும் ’Sound of Metal’ படத்திற்காக சிறந்த நடிகருக்கான ஆஸ்கர் பட்டியலில் இடம்பெற்றிருந்தார். இந்த நிலையில் அவர் எழுதி, நடித்த ’The Long Goodbye ’படத்திற்கு ஆஸ்கர் விருது வழங்கப்பட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

4 hours ago

சினிமா

7 hours ago

சினிமா

7 hours ago

சினிமா

8 hours ago

சினிமா

9 hours ago

சினிமா

9 hours ago

சினிமா

10 hours ago

சினிமா

11 hours ago

சினிமா

11 hours ago

சினிமா

12 hours ago

சினிமா

16 hours ago

சினிமா

16 hours ago

சினிமா

22 hours ago

சினிமா

22 hours ago

சினிமா

22 hours ago

மேலும்