திரைப்படமாகிறது பஸ்டர் கீட்டனின் வாழ்க்கை

By செய்திப்பிரிவு

மறைந்த நகைச்சுவை நடிகர் பஸ்டர் கீட்டனின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டு பயோபிக் சினிமா ஒன்று உருவாகவுள்ளது. இதனை ‘ஃபோர்டு vs ஃபெராரி’ படத்தை இயக்கிய ஜேம்ஸ் மேங்கோல்ட் இயக்கவுள்ளார்.

ஜேம்ஸ் மேங்கோல்ட் இயக்கத்தில் 2019-ஆம் ஆண்டு வெளியான படம் ‘ஃபோர்டு vs ஃபெராரி’. போர்ட் நிறுவனத்துக்கும் ஃபெராரி நிறுவனத்துக்கும் இடையே நடந்த பனிப்போரை பற்றி பேசுகிற இப்படம் பெறும் வரவேற்பை பெற்றது. இதில் மேட் டேமன், கிறிஸ்டியன் பேல் இணைந்து நடித்திருந்தனர். இப்படத்துக்கு இரண்டு ஆஸ்கர் விருதுகள் வழங்கப்பட்டன.

இப்படத்துக்குப் பிறகு ஜேம்ஸ் மேங்கோல்ட் ‘இண்டியானா ஜோன்ஸ் 5’ படத்தை இயக்கி வருகிறார். இப்படம் அடுத்த ஆண்டு வெளியாகவுள்ளது. தற்போது இறுதிகட்டத்தில் இருக்கும் இப்படத்தின் படப்பிடிப்புப் பணிகள் முடிந்தவுடன் பிரபல நகைச்சுவை நடிகர் பஸ்டர் கீட்டனின் பயோபிக் படமொன்றை இயக்கவுள்ளார்.

1917 முதல் 1941 வரை சார்லி சாப்ளினுக்கு இணையான நடிகராகவும் இயக்குநராகவும் வலம் வந்தவர் பஸ்டர் கீட்டன். மௌனப் படங்களின் காலகட்டத்திலேயே பல்வேறு தொழில்நுட்பங்களை தன் படங்களில் பயன்படுத்தியவர். இவரது வாழ்க்கையைப் பற்றி எழுதப்பட்ட ‘பஸ்டர் கீட்டன்: கட் டு தி சேஸ்’ புத்தகத்தை அடிப்படையாகக் கொண்டு இப்படம் உருவாகவுள்ளது. இப்படம் பஸ்டர் கீட்டனின் இளமை கால வாழ்க்கை, அவர் சந்தித்த அவமானங்கள், அவரது வெற்றிகள் அவரது குடிப்பழக்கம் ஏற்படுத்திய விளைவுகள் ஆகியவற்றைப் பற்றி பேசவுள்ளதாக கூறப்படுகிறது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

2 hours ago

சினிமா

2 hours ago

சினிமா

2 hours ago

சினிமா

3 hours ago

சினிமா

3 hours ago

சினிமா

3 hours ago

சினிமா

15 hours ago

சினிமா

16 hours ago

சினிமா

17 hours ago

சினிமா

17 hours ago

சினிமா

18 hours ago

சினிமா

19 hours ago

சினிமா

19 hours ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

மேலும்