‘தி க்ரே மேன்’ முதல் க்ளிம்ப்ஸ் வெளியானது - தனுஷ் ரசிகர்களுக்கு ஏமாற்றம்!

By செய்திப்பிரிவு

ரையான் காஸ்லிங், க்றிஸ் எவான்ஸ், தனுஷ் நடிப்பில் உருவாகி வரும் ஹாலிவுட் படமான ‘தி க்ரே மேன்’ படத்தின் க்ளிம்ப்ஸ் வெளியாகியுள்ளது.

நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி தளத்தின் பிரம்மாண்டத் தயாரிப்பாக 'தி க்ரே மேன்' என்கிற திரைப்படம் உருவாகிறது. 2009ஆம் ஆண்டு அமெரிக்காவைச் சேர்ந்த மார்க் க்ரேனி என்பவர் எழுதிய ‘தி க்ரே மேன்’ என்ற நாவலை அடிப்படையாகக் கொண்டு இந்தப் படம் உருவாகிறது. இதில் ரையான் காஸ்லிங், க்றிஸ் எவான்ஸ் உள்ளிட்ட பிரபல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.

இந்தப் படத்தை 'அவெஞ்சர்ஸ் இன்ஃபினிடி வார்', 'எண்ட்கேம்' உள்ளிட்ட படங்களை இயக்கிய ருஸ்ஸோ சகோதரர்கள் இயக்குகின்றனர். இந்தப் படத்தில் ஒரு முக்கியக் கதாபாத்திரத்தில் தனுஷ் நடித்துள்ளார். கரோனா அச்சுறுத்தலால் இடையில் நிறுத்தப்பட்ட இப்படத்தின் படப்பிடிப்பு கடந்த ஆண்டு மீண்டும் தொடங்கி ஒரே கட்டமாக முடிக்கப்பட்டது.

இந்நிலையில் இப்படத்தின் முதல் க்ளிம்ப்ஸ் காட்சிகளை நேற்று நள்ளிரவு படக்குழு அதிகாரபூர்வமாக வெளியிட்டது. வெளியிட்ட சில நிமிடங்களிலேயே பல லட்சம் பேரால் பார்க்கப்பட்ட உலக அளவில் ட்ரெண்ட் ஆனது. ஆனால் இந்த க்ளிம்ப்ஸ் காட்சிகளில் தனுஷ் தொடர்பான காட்சி எதுவும் இடம்பெறவில்லை. இதனால் தனுஷ் ரசிகர்கள் பெரிதும் ஏமாற்றமடைந்துள்ளனர். தனுஷ் தொடர்பான காட்சிகளை வெளியிடுமாறு ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் படக்குழுவினரிடம் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE