டாம் க்ரூஸ் நடிப்பில் உருவாகியிருக்கும் ‘மிஷன் இம்பாசிபிள்’ 7 மற்றும் 8 ஆகிய இரு பாகங்களின் வெளியீட்டுத் தேதிகள் மீண்டும் ஒத்திவைக்கப்பட்டுள்ளன.
டாம் க்ரூஸ் நடிப்பில் வெளியாகி உலகமெங்கும் வரவேற்பைப் பெற்ற படம் ‘மிஷன் இம்பாசிபிள்’. இப்பட வரிசையில் இதுவரை ஆறு பாகங்கள் வெளியாகியுள்ளன. 2018-ஆம் ஆண்டு வெளியான ‘மிஷன் இம்பாசிபிள்: ஃபால்அவுட்’ திரைப்படம் உலகமெங்கும் நல்ல வரவேற்பைப் பெற்றது. இதனால் இப்படத்தை கிறிஸ்டோபர் மெக்குயரியிடமே அடுத்த இரண்டு பாகங்களை இயக்கும் பொறுப்பை பாராமவுண்ட் நிறுவனம் வழங்கியுள்ளது.
2020, 21-ஆம் ஆண்டுக்குள் ‘மிஷன் இம்பாசிபிள்’ அடுத்த இரண்டு பாகங்களின் படப்பிடிப்பையும் முடித்து 2021-ஆம் ஆண்டு ஜூலை 23ஆம் தேதி 7-ஆம் பாகத்தையும், 2022ஆம் ஆண்டு ஆகஸ்டு 5-ஆம் தேதி எட்டாம் பாகத்தையும் வெளியிட பாராமவுண்ட் நிறுவனம் முடிவு செய்திருந்தது. ஆனால், கரோனா நெருக்கடியால் குறிப்பிட்ட தேதிக்குள் படப்பிடிப்பை முடிக்க முடியாமல் பலமுறை படப்பிடிப்பு தள்ளிவைக்கப்பட்டது. இதனால் படத்தின் இரண்டு படத்தின் வெளியீட்டுத் தேதியும் முறையே செப்டம்பர் 30, 2022 மற்றும் ஜூலை 27, 2023 ஆகிய தேதிகளுக்கு ஒத்திவைக்கப்பட்டன.
கடந்த ஆண்டு படப்பிடிப்புக்கான அனுமதி கிடைத்த பிறகு லண்டனில் ஆளில்லாத பழைய விமான தளத்தில் ஒரு தனி கிராமத்தையே உருவாக்கி படப்பிடிப்பு நடத்தப்பட்டது. அப்போது படக்குழுவினர் பலருக்கும் கரோனா தொற்று ஏற்பட்டதால் மீண்டும் சில நாட்கள் படப்பிடிப்பு தள்ளிவைக்கப்பட்டது.
» விஜய் ஆண்டனி நடிக்கும் ‘கொலை’ படப்பிடிப்பு நிறைவு
» பிரியங்கா சோப்ரா, நிக் ஜோனஸ் வாடகைத் தாய் மூலம் பெற்றோர் ஆயினர்
இந்நிலையில், தற்போது மீண்டும் கரோனா அச்சுறுத்தல் உலகம் முழுவதும் அதிகரித்து வருவதால் பல்வேறு நாடுகளிலும் திரையரங்குகள் மூடப்பட்டு வருகின்றன. இதனால் ‘மிஷன் இம்பாசிபிள்’ 7 மற்றும் 8 ஆகிய இரு பாகங்களின் வெளியீட்டுத் தேதியும் ஒத்திவைக்கப்பட்டுள்ளன. அதன்படி ‘மிஷன் இம்பாசிபிள் 7’ 2023-ஆம் ஆண்டு ஜூலை 14ஆம் தேதியும், ‘மிஷன் இம்பாசிபிள் 8’ 2024-ஆம் ஆண்டு ஜூன் 28 தேதியும் வெளியாகும் என்று படக்குழு அறிவித்துள்ளது.
முக்கிய செய்திகள்
சினிமா
12 hours ago
சினிமா
16 hours ago
சினிமா
16 hours ago
சினிமா
16 hours ago
சினிமா
17 hours ago
சினிமா
18 hours ago
சினிமா
18 hours ago
சினிமா
19 hours ago
சினிமா
20 hours ago
சினிமா
20 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago