'ஸ்பைடர்மேன்: நோ வே ஹோம்' செய்த வசூல் சாதனை

By செய்திப்பிரிவு

'ஸ்பைடர்மேன்: நோ வே ஹோம்' திரைப்படம் கரோனா காலத்தில் 1 மில்லியன் டாலருக்கும் அதிகமாக வசூலித்த முதல் திரைப்படம் என்ற பெருமையைப் பெற்றுள்ளது.

'ஸ்பைடர்மேன்: நோ வே ஹோம் திரைப்படம்' டிசம்பர் 16ஆம் தேதி உலக அளவில் வெளியானது. ஸ்பைடர்மேன் முந்தைய பாகங்களில் நடித்த டாம் ஹாலண்ட், ஜிண்டாயா, ஜேகப், மாரிஸா டோமீ உள்ளிட்ட பலரும் இப்படத்தில் நடித்துள்ளனர்.

இத்திரைப்படம் ரசிகர்களின் பெரும் ஆதரவோடு உலக அளவில் வெற்றிகரமாக ஓடி வருகிறது. இதன் காரணமாக கரோனா காலத்தில் 1 மில்லியன் டாலர் வசூலித்த முதல் திரைப்படம் என்ற பெருமையைப் பெற்றுள்ளது.

மேலும் 2021ஆம் ஆண்டு அதிக அளவில் வசூலித்த திரைப்படம் என்ற பெருமையையும் 'ஸ்பைடர்மேன்: நோ வே ஹோம்' திரைப்படம் பெற்றுள்ளது. 10 நாட்களில் இந்தச் சாதனையை 'ஸ்பைடர்மேன்: நோ வே ஹோம்' புரிந்துள்ளது

கரோனாவுக்கு முன் 2019ஆம் ஆண்டு வெளியான ஸ்டார் வார்ஸ் திரைப்படம் மட்டுமே 1 மில்லியன் டாலரைக் கடந்து வசூல் செய்திருந்தது. அதனைத் தொடர்ந்து வந்த எந்தத் திரைப்படமும் கரோனா காரணமாக வசூல் ரீதியாக சாதனை புரியவில்லை.

இந்த நிலையில் 'ஸ்பைடர்மேன்: நோ வே ஹோம்' திரைப்படம் 1 மில்லியன் டாலருக்கு அதிகமாக வசூல் செய்து சாதனை படைத்துள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

2 hours ago

சினிமா

2 hours ago

சினிமா

2 hours ago

சினிமா

2 hours ago

சினிமா

6 hours ago

சினிமா

7 hours ago

சினிமா

9 hours ago

சினிமா

11 hours ago

சினிமா

12 hours ago

சினிமா

12 hours ago

சினிமா

13 hours ago

சினிமா

13 hours ago

சினிமா

14 hours ago

சினிமா

15 hours ago

சினிமா

15 hours ago

மேலும்