'ஸ்பைடர்மேன்: நோ வே ஹோம்' படத்தின் படப்பிடிப்பு புகைப்படங்கள் இணையத்தில் லீக் ஆனது குறித்து டாம் ஹாலண்ட் விளக்கம் அளித்துள்ளார்.
2019ஆம் ஆண்டு வெளியான 'ஸ்பைடர்மேன் ஃபார் ஃப்ரம் ஹோம்' படம் மிகப்பெரிய வெற்றி பெற்றதைத் தொடர்ந்து அடுத்த பாகத்துக்காக ரசிகர்கள் ஆவலுடன் காத்திருந்தனர். ஆனால், திடீரென சோனி- மார்வெல் நிறுவனங்களுக்கிடையே காப்புரிமை தொடர்பான பிரச்சினை வந்து இரண்டு நிறுவனங்களும் பிரிவதாக அறிவிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து நடந்த இறுதிக்கட்டப் பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதால் தற்போது 'ஸ்பைடர்மேன்: நோ வே ஹோம்' படத்தை இரண்டு தரப்பும் சேர்ந்தே தயாரிக்கின்றன.
கடந்த ‘ஸ்பைடர்மேன்’ படங்களில் முக்கியப் பாத்திரங்களாக நடித்த டாம் ஹாலண்ட், ஜிண்டாயா, ஜேகப், மாரிஸா டோமீ உள்ளிட்ட அனைவருமே இந்தப் படத்திலும் நடித்து வருகின்றனர். நீண்ட நாட்களாகவே இப்படம் குறித்த தகவல்களை அதிகம் வெளியிடாமல் ரகசியம் காத்து வந்தது படக்குழு.
சமீபத்தில் வெளியான இப்படத்தின் ட்ரெய்லரில் 2004ஆம் ஆண்டு வெளியான ‘ஸ்பைடர்மேன்’ இரண்டாம் பாகத்தில் வில்லனாக நடித்த டாக்டர் ஆக்டோபஸ் தோன்றி ஸ்பைடர்மேன் ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி அளித்தார்.
இந்நிலையில் 2002 ஆம் ஆண்டு வெளியாகி மாபெரும் வரவேற்பைப் பெற்ற ‘ஸ்பைடர்மேன்’ படத்தில் ஸ்பைடர்மேனாக நடித்த டோபி மேக்யூர் மற்றும் ‘தி அமேசிங் ஸ்பைடர்மேன்’ படத்தில் ஸ்பைடர்மேனாக நடித்த ஆண்ட்ரூ கார்ஃபீல்ட் இருவரும் இப்படத்தில் நடித்து வருவதாக நீண்ட நாட்களாகவே தகவல்கள் வெளியான வண்ணம் இருந்தன.
இத்தகவல்களை உறுதி செய்யும் வகையில் சமீபத்தில் 'ஸ்பைடர்மேன்: நோ வே ஹோம்' படத்தின் படப்பிடிப்புத் தளத்தில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் என்று சில படங்கள் இணையத்தில் பரவி வருகின்றன. அதில் டோபி மேக்யூர் இடம்பெற்றுள்ளார். இதன் மூலம் இப்படத்தில் அவரும் ஒரு ஸ்பைடர்மேனாகத் தோன்ற இருக்கிறார் என்று ரசிகர்கள் கூறி வருகின்றனர்.
ஆனால், இப்படத்தில் டோபி மேக்யூர் மற்றும் ஆண்ட்ரூ கார்ஃபீல்ட் இருவருமே நடிக்கவில்லை என்றும், அப்படங்கள் உண்மைக்குப் புறம்பானவை என்றும் படத்தின் நாயகன் டாம் ஹாலண்ட் ஆணித்தரமாக மறுத்துள்ளார். இதை சமீபத்தில் ஒரு பேட்டியில் அவர் உறுதிப்படுத்தியுள்ளார்.
முக்கிய செய்திகள்
சினிமா
1 hour ago
சினிமா
1 hour ago
சினிமா
1 hour ago
சினிமா
2 hours ago
சினிமா
2 hours ago
சினிமா
3 hours ago
சினிமா
5 hours ago
சினிமா
19 hours ago
சினிமா
23 hours ago
சினிமா
23 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago