மறைந்த நடிகர் பால் வாக்கரின் மகள் மெடோ வாக்கரின் திருமணம் நேற்று நடைபெற்றது. இதில் நடிகர் வின் டீஸல் கலந்துகொண்டு, மெடோ வாக்கரை அழைத்துவந்த நிகழ்வு பலரை நெகிழச் செய்தது.
’தி ஃபாஸ்ட் அண்ட் தி ஃப்யூரியஸ்’ உள்ளிட்ட பல படங்களில் நடித்தவர் பால் வாக்கர். ஹாலிவுட்டின் பிரபலமான நடிகர்களில் ஒருவரான பால் வாக்கருக்கு உலகெங்கும் ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். கடந்த 2013ஆம் ஆண்டு நடந்த ஒரு கோர விபத்தில் எதிர்பாராதவிதமாக பால் வாக்கர் உயிரிழந்தார். அவரது திடீர் மரணம் ஹாலிவுட் ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.
பால் வாக்கரின் மறைவுக்குப் பின் அவருக்கான ரசிகர் கூட்டம் அதிகமானதே தவிர குறையவில்லை. இந்நிலையில், வெள்ளிக்கிழமை அன்று பால் வாக்கரின் மகள் மெடோ வாக்கரின் திருமணம் நடைபெற்றது. இவர் நடிகர் லூயி தார்ன்டன் ஆலனை மணந்துள்ளார்.
வழக்கமாக கிறிஸ்தவ முறைப்படி, மணப்பெண் அவரது தந்தையின் கைகளைப் பிணைத்தபடி தேவாலயத்துக்குள் நுழைந்து மேடையேறுவார். இந்தத் திருமணத்தில் பால் வாக்கருக்கு பதிலாக அவரது நண்பரும், சக நடிகருமான வின் டீஸல், மெடோ வாக்கரின் கைகளைப் பிடித்து அழைத்து வந்தார்.
தனது திருமணத்தில் எடுக்கப்பட்ட வீடியோ பதிவை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ள மெடோ, எங்கள் திருமணம் முடிந்தது என்று குறிப்பிட்டுள்ளார். மேலும் வின் டீஸலுடன் நடந்துவரும் புகைப்படத்தையும் மெடோ பகிர்ந்துள்ளார். இந்தப் புகைப்படங்களுக்கும், காணொலிக்கும் ரசிகர்கள் பலர் நெகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.
வின் டீசல், மறைந்த தனது நண்பர் பால் வாக்கரின் நினைவாக தனது மகளுக்கு பால் என்று பெயர் சூட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.
முக்கிய செய்திகள்
சினிமா
8 hours ago
சினிமா
8 hours ago
சினிமா
8 hours ago
சினிமா
9 hours ago
சினிமா
9 hours ago
சினிமா
10 hours ago
சினிமா
12 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago