கிறிஸ்டோஃபர் நோலனின் அடுத்த படத்தைத் தயாரிக்கும் யூனிவர்ஸல்

By ஐஏஎன்எஸ்

பிரபல ஹாலிவுட் இயக்குநர் கிறிஸ்டோஃபர் நோலனின் அடுத்த படத்தை யூனிவர்ஸல் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரிக்கிறது.

பல வருடங்களாகவே கிறிஸ்டோஃபர் நோலன், வார்னர் பிரதர்ஸ் நிறுவனத்துக்காக மட்டுமே படங்கள் இயக்கி வந்தார். ’டார்க் நைட்’ திரைப்பட வரிசை, ’இன்ஸெப்ஷன்’, ’டன்கிர்க்’, சமீபத்திய ’டெனட்’ வரை வார்னர் பிரதர்ஸ் நிறுவனத்தின் பங்கு இருந்திருக்கிறது. அதிலும் ஊரடங்கு நேரத்தில் திரையரங்குகளில் வெளியான முதல் பெரிய பட்ஜெட் திரைப்படம் என்ற பெயரை ’டெனெட்’ பெற்றது.

ஆனால், 2021ஆம் ஆண்டு, தங்கள் தயாரிப்பில் அத்தனை படங்களும் திரையரங்கிலும், ஹெச்பிஓ மேக்ஸ் ஓடிடி தளத்திலும் ஒரே நாளில் வெளியாகும் என்று வார்னர் பிரதரஸ் நிறுவனம் அறிவித்தது. இந்த முடிவைக் கடுமையாக விமர்சித்திருந்த நோலன், ஹெச்பிஓ மேக்ஸ் தளத்தை மோசமான ஓடிடி தளம் என்றும் கூறினார். எனவே, இனி நோலன் வார்னர் நிறுவனத்துடன் இணைந்து பணியாற்றுவது சந்தேகமே என்று துறை நோக்கர்கள் பலர் கருத்து தெரிவித்திருந்தனர்.

இந்நிலையில் 19 வருடங்கள் கழித்து வேறொரு தயாரிப்பு நிறுவனம் கிறிஸ்டோஃபர் நோலனின் திரைப்படத்தைத் தயாரிக்கிறது என்று உறுதிப்படுத்தப்பட்ட தகவல் ஹாலிவுட் ஊடகங்களில் வெளியாகியுள்ளது.

யூனிவர்ஸல் ஸ்டுடியோஸ் தயாரிப்பாக உருவாகும் இந்தப் படம், இரண்டாம் உலகப் போரில் அணுகுண்டை உருவாக்கியவர்களில் முக்கிய நபரான ஜே ராபர்ட் ஓப்பன்ஹீமரைப் பற்றியது என்று ஹாலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்தத் திரைக்கதையைச் சில மாதங்களில் சில முக்கியத் தயாரிப்பு நிறுவனங்களுக்கு நோலன் அனுப்பியிருந்தார். எம்ஜிஎம், சோனி உள்ளிட்ட நிறுவனங்கள் ஆர்வம் காட்டினாலும் அவர்களை முந்தி தற்போது யூனிவர்ஸல் தயாரிக்கிறது.

கரோனா ஊரடங்கு ஆரம்பித்த சமயத்திலிருந்தே யூனிவர்ஸல் நிறுவனம், தங்கள் தயாரிப்புகளை முதலில் திரையரங்கில் மட்டுமே பிரத்யேகமாக வெளியிட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

6 mins ago

சினிமா

15 mins ago

சினிமா

22 mins ago

சினிமா

9 hours ago

சினிமா

11 hours ago

சினிமா

13 hours ago

சினிமா

14 hours ago

சினிமா

15 hours ago

சினிமா

15 hours ago

சினிமா

16 hours ago

சினிமா

16 hours ago

சினிமா

17 hours ago

சினிமா

18 hours ago

சினிமா

18 hours ago

சினிமா

19 hours ago

மேலும்