சில்வஸ்டர் ஸ்டலோன், டோனி ஜா, 50 செண்ட்: புதிய எக்ஸ்பேன்டபிள்ஸ் திரைப்படத்தில் சேரும் நட்ச்த்திரப் பட்டாளம்

By செய்திப்பிரிவு

புதிதாக உருவாகும் ’எக்ஸ்பேன்டபிள்ஸ்’ திரைப்படத்தில் ஜேஸன் ஸ்டேதம், சில்வஸ்டர் ஸ்டலோன், 50 செண்ட் மற்றும் மேகன் ஃபாக்ஸ் ஆகியோர் நடிப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

லயன்ஸ்கேட் மற்றும் மில்லினியம் மீடியா இணைந்து தயாரிக்கும் இந்தப் படத்தில் ஏற்கனவே பழக்கப்பட்ட சில முகங்களும், சில புதிய முகங்களும் இருப்பார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

நான்காவது பாகமான இதில் கடந்த பாகங்களில் நடித்த டால்ஃப் லண்ட்க்ரென், ராண்டி கோடர், பார்னி ராஸ், லீ க்றிஸ்ட்மஸ், கன்னர் ஜெனஸன் உள்ளிட்டவர்கள் நடிக்கின்றனர். மேலும் புதிதாக 50 செண்ட் ஜாக்ஸன், மேகன் ஃபாக்ச், டோனி ஜா ஆகியோரும் புதிதாக நடிக்கின்றனர்.

கடந்த பாகங்களைப் போல அல்லாமல் இந்த பாகம் ஸ்டேதம் கதாபாத்திரத்தை மையமாக வைத்து இருக்கும் என்றும், மேகன் ஃபாக்ஸ் முதன்மை பெண் கதாபாத்திரமாக இருப்பார் என்றும் தெரிகிறது.

இன்னும் சில வாரங்களில் படப்பிடிப்பு தொடங்கவுள்ளது. இன்னும் வெளியீடு தேதி முடிவு செய்யப்படவில்லை. தான் இந்தப் படத்தில் நடிப்பது குறித்து 50 செண்ட் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து உற்சாகம் தெரிவித்துள்ளார்.

முதல் ’எக்ஸ்பேன்டபிள்ஸ்’ திரைப்படம் 2010ஆம் ஆண்டு வெளியானது. 2012ஆம் ஆண்டு இரண்டாம் பாகமும், 2014ஆம் ஆண்டு மூன்றாம் பாகமும் வெளியானது. இந்த மூன்று படங்களும் சேர்ந்து இதுவரை 800 மில்லியன் அமெரிக்க டாலர்களுக்கும் அதிகமாக சம்பாதித்துள்ளன.

சண்டைப் பயிற்சியாளராக இருந்து இயக்குநராக இருந்த ஸ்காட் வா நான்காம் பாகத்தைத் தயாரிக்கிறார். நடிகர் ஜேஸன் ஸ்டேதமும் தயாரிப்பாளர்களில் ஒருவராக செயல்படவுள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

3 hours ago

சினிமா

3 hours ago

சினிமா

3 hours ago

சினிமா

3 hours ago

சினிமா

4 hours ago

சினிமா

5 hours ago

சினிமா

7 hours ago

சினிமா

21 hours ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

மேலும்