கேப்டன் அமெரிக்கா 4: நாயகனாக ஆந்தனி மெக்கீ ஒப்பந்தம்

By செய்திப்பிரிவு

'கேப்டன் அமெரிக்கா' நான்காம் பாகத்தில் நடிக்க ஆந்தனி மெக்கீ ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

2011ஆம் ஆண்டு வெளியான ‘கேப்டன் அமெரிக்கா: தி ஃபர்ஸ்ட் அவெஞ்சர்’ படத்தின் மூலம் மார்வெல் சினிமா உலகில் அறிமுகமானவர் க்றிஸ் எவான்ஸ். அதற்குப் பல ஆண்டுகளுக்கு முன்பே ‘ஃபென்டாஸ்டிக் 4’ படத்தில் டார்ச் கதாபாத்திரத்தில் சூப்பர் ஹீரோவாக நடித்திருந்தாலும் 'கேப்டன் அமெரிக்கா' படம்தான் க்றிஸ் எவான்ஸைப் பட்டிதொட்டியெங்கும் கொண்டுசேர்த்தது.

கடந்த ஆண்டு வெளியாகி பெரும் வெற்றியைப் பெற்ற ‘அவெஞ்சர்ஸ் எண்ட் கேம்’ படத்தோடு மார்வெல் படங்களிலிருந்து தான் ஓய்வு பெறுவதாக அறிவித்தார் க்றிஸ் எவான்ஸ்.

மார்வெல் படங்களில் ஃபால்கன் கதாபாத்திரத்திடம் தனது கேடயத்தை கேப்டன் அமெரிக்கா ஒப்படைப்பதோடு ‘எண்ட் கேம்’ படம் நிறைவடையும். அதனைத் தொடர்ந்து வெளியான ‘ஃபால்கன் அன்ட் தி வின்டர் சோல்ஜர்’ வெப் தொடரின் இறுதியில் ஃபால்கனாக நடித்த ஆந்தனி மெக்கீ இனி கேப்டன் அமெரிக்காவாகத் தொடர்வார் என்று காட்டப்பட்டிருந்தது.

இந்நிலையில் தற்போது ஆந்தனி மெக்கீ, 'கேப்டன் அமெரிக்கா' நான்காம் பாகத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இதை மார்வெல் நிறுவனம் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.

இதன் மூலம் பெரிய திரையில் முதன்முறையாக கேப்டன் அமெரிக்காவாக ஆந்தனி மெக்கீ நடிக்கவுள்ளார். ‘ஃபால்கன் அன்ட் தி வின்டர் சோல்ஜர்’ வெப் தொடருக்குக் கதை எழுதிய மால்கம் ஸ்பெல்மேன் இப்படத்துக்கும் கதை எழுதிகிறார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

3 hours ago

சினிமா

3 hours ago

சினிமா

7 hours ago

சினிமா

7 hours ago

சினிமா

8 hours ago

சினிமா

9 hours ago

சினிமா

13 hours ago

சினிமா

13 hours ago

சினிமா

14 hours ago

சினிமா

14 hours ago

சினிமா

14 hours ago

சினிமா

14 hours ago

சினிமா

15 hours ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

மேலும்