இனி எடுக்கப்படவிருக்கும் 'ஃபாஸ்ட் அண்ட் ஃபியூரியஸ்' திரை வரிசையின் படங்களில் நடிக்கப்போவதில்லை என்று நடிகர் ட்வைன் ஜான்சன் முடிவு செய்துள்ளார்.
ஹாலிவுட்டின் பிரபலமான திரை வரிசைகளில் ஒன்று 'ஃபாஸ்ட் அண்ட் ஃபியூரியஸ்'. இதன் கார் துரத்தல் மற்றும் சண்டைக் காட்சிகளைப் பெரிய திரையில் பார்ப்பதற்கென்றே உலகம் முழுவதிலும் கோடிக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர். சமீபத்தில் வெளியான இந்தப் படத்தின் 9ஆம் பாகம், இதுவரை 591.3 மில்லியன் அமெரிக்க டாலர்களை வசூலித்து ஹிட்டடித்துள்ளது.
'ஃபாஸ்ட் அண்ட் ஃபியூரியஸ்'ஸின் 6வது பாகத்தில் ட்வைன் ஜான்சனின் 'ஹாப்ஸ்' கதாபாத்திரம் அறிமுகமானது. ரெஸ்ட்லிங் பொழுதுபோக்கு விளையாட்டில் 'தி ராக்' என்கிற பெயரில் சர்வதேச அளவில் பிரபலமானவர் ட்வைன் ஜான்சன் என்பது குறிப்பிடத்தக்கது.
தொடர்ந்து அடுத்த இரண்டு பாகங்களிலும் இந்த ஹாப்ஸ் கதாபாத்திரம் இடம்பெற்று ரசிகர்களிடம் வரவேற்பையும் பெற்றது. இதனால் ஹாப்ஸ் மற்றும் ஷா என்ற இரண்டு கதாபாத்திரங்களை மட்டும் வைத்துத் தனிப்படம் ஒன்றும் வெளியாகி வெற்றி பெற்றது.
இந்நிலையில் படத்தின் நாயகர்களில் ஒருவரும், தயாரிப்பாளர்களில் ஒருவருமான வின் டீஸலுடன் ஏற்பட்டுள்ள கருத்து வேறுபாடால் ஜான்சன் இனி இந்த திரைவரிசையில் நடிக்க மாட்டார் என்று கூறப்பட்டது. அதைப் போலவே சமீபத்தில் வெளியான 9ஆம் பாகத்தில் ஜான்சன் நடிக்கவில்லை.
முன்னதாக இதுபற்றிப் பேசியிருந்த வின் டீஸல், "நான் கொஞ்சம் கடுமையான அன்பை அவரிடம் காட்டினேன். ஆனால் அந்தக் கதாபாத்திரத்திடமிருந்து நடிப்பைப் பெற, நான் தயாரிக்கும் படம் நன்றாக வர நான் எதையும் செய்வேன்" என்று கூறியிருந்தார்.
வின் டீஸலின் கருத்து குறித்து என்ன நினைக்கிறீர்கள் என்று ஜான்சனிடம் சமீபத்தில் ஒரு பேட்டியில் கேட்கப்பட்டபோது, "நான் வாய்விட்டு வயிறு வலிக்கச் சிரித்தேன். எல்லோரும் சிரித்தார்கள் என்றே நினைக்கிறேன். அதை அப்படியே விட்டு விடலாம் என்றிருக்கிறேன்.
அவர்களுக்கு என் வாழ்த்துகள். ஃபாஸ்ட் 9, 10, 11 என நான் இல்லாமல் அவர்கள் எடுக்கவிருக்கும் அத்தனை ஃபாஸ்ட் அண்ட் ஃபியூரியஸ் திரைப்படங்களுகும் என் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்" என்று கூறியுள்ளார்.
'ஹாப்ஸ் அண்ட் ஷா'வின் அடுத்தடுத்த பாகங்களில் ஜான்சன் நடிப்பாரா என்பது குறித்து இன்னும் உறுதியானத் தகவல்கள் வரவில்லை.
முக்கிய செய்திகள்
சினிமா
3 mins ago
சினிமா
17 mins ago
சினிமா
25 mins ago
சினிமா
46 mins ago
சினிமா
1 hour ago
சினிமா
2 hours ago
சினிமா
4 hours ago
சினிமா
18 hours ago
சினிமா
22 hours ago
சினிமா
22 hours ago
சினிமா
23 hours ago
சினிமா
23 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago