மார்வெல் நிறுவனத்தின் நான்காம் கட்ட படங்களில் ஒன்றான ‘ப்ளாக் விடோ’ வரும் ஜூலை 9 (வெள்ளி) அன்று டிஸ்னி + ஹாட்ஸ்டார் தளத்தில் வெளியாகவுள்ளது. இப்படத்தில் ஸ்கார்லெட் ஜோஹன்சன், டேவிட் ஹார்பர், ரேச்சல் வெய்ஸ் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். கடந்த ஆண்டே வெளியாகவேண்டிய இப்படம் கரோனா அச்சுறுத்தலால் மூன்று முறை ஒத்திவைக்கப்பட்டு தற்போது ஓடிடியில் நேரடியாக வெளியாகிறது.
இந்நிலையில் ‘ட்ரூ டிடெக்டிவ்’ தொடரில் நடித்து பிரபலமான நடிகர் ஸ்டீபர் டார்ஃப் ‘ப்ளாக் விடோ’ படத்தை கடுமையாக சாடியுள்ளார். இது குறித்து சமீபத்தில் பேட்டி ஒன்றில் அவர் கூறியிருப்பதாவது:
இப்படம் ஒரு குப்பையைப் போல எனக்கு தோன்றுகிறது. ஒரு மோசமான வீடியோ கேம் போன்ற ஒரு படமாக இருக்கும் என்று தெரிகிறது. அப்படத்தில் நடித்த நடிகர்களை நினைத்து நான் சங்கடப்படுகிறேன். ஸ்கார்லெட்டை நினைத்தும் நான் சங்கடப்படுகிறேன். நிச்சயமான அவர் இப்படத்துக்காக 5 அல்லது 7 மில்லியன் டாலர்கள் பெற்றிருப்பார். ஆனாலும் அவருக்காக நான் சங்கடப்படவே செய்கிறேன். நான் அது போன்ற படங்களில் நடிக்க விரும்புவதில்லை.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
முக்கிய செய்திகள்
சினிமா
12 hours ago
சினிமா
12 hours ago
சினிமா
15 hours ago
சினிமா
19 hours ago
சினிமா
19 hours ago
சினிமா
21 hours ago
சினிமா
23 hours ago
சினிமா
23 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago