'மிஷன் இம்பாஸிபிள் 7' படத்தில் பிரபாஸ் நடிக்கவுள்ளதாக வெளியான செய்திக்கு இயக்குநர் கிறிஸ்டோபர் மெக்குயரி விளக்கம் அளித்துள்ளார்.
டாம் க்ரூஸ் நடிப்பில் வெளியாகி உலகமெங்கும் வரவேற்பைப் பெற்ற படம் ‘மிஷன் இம்பாஸிபிள்’. இப்பட வரிசையில் இதுவரை ஆறு பாகங்கள் வெளியாகியுள்ளன. 2018-ம் ஆண்டு வெளியான ‘மிஷன் இம்பாஸிபிள்: ஃபால்அவுட்’ திரைப்படம் உலகமெங்கும் நல்ல வரவேற்பைப் பெற்றது. இதனால் இப்படத்தை இயக்கிய கிறிஸ்டோபர் மெக்குயரியிடமே அடுத்த இரண்டு பாகங்களை இயக்கும் பொறுப்பைத் தயாரிப்பு நிறுவனமான பாராமவுண்ட் வழங்கியுள்ளது.
கரோனா அச்சுறுத்தலால் இந்தப் படத்தின் படப்பிடிப்பு தடைப்பட்டது. 'மிஷன் இம்பாஸிபிள் 7' படத்தில் ஒரு கதாபாத்திரத்தில் நடிகர் பிரபாஸ் நடிக்கவிருப்பதாக ட்விட்டரில் செய்தி பரவி வருகிறது. இது தொடர்பான ஒரு பதிவு பெரும் வைரலானது. இயக்குநர் கிறிஸ்டோபர் மெக்குயரி மற்றும் பிரபாஸ் இருவருமே இது தொடர்பாக இத்தாலியில் பேச்சுவார்த்தை நடத்தியதாகவும் அந்தப் பதிவில் இடம்பெற்றுள்ளது.
இது தொடர்பாக கிறிஸ்டோபர் மெக்குயரியின் ட்விட்டர் கணக்கைக் குறிப்பிட்டு பயனர் ஒருவர், " ‘மிஷன் இம்பாஸிபிள் 7’ படத்தில் ஒரு முக்கியக் கதாபாத்திரத்தில் இந்திய நடிகர் பிரபாஸ் நடிப்பதாக ஒரு செய்தி, இந்தியச் செய்தி ஊடகங்களில் பரவலாகி வருகிறது. இது உண்மையா, இல்லையா என்பதை உறுதிப்படுத்த முடியுமா?" என்று கேள்வி எழுப்பினார்.
அதற்குப் பதிலளிக்கும் விதமாக கிறிஸ்டோபர் மெக்குயரி, "அவர் மிகத் திறமையானவராக இருந்தாலும் நாங்கள் இதுவரை சந்தித்ததில்லை. இணையத்துக்கு உங்களை வரவேற்கிறேன்" என்று தெரிவித்துள்ளார். இதன் மூலம் ட்விட்டர் தளத்தில் வைரலான பதிவு வெறும் வதந்தி என்பது உறுதியாகிறது.
முக்கிய செய்திகள்
சினிமா
2 hours ago
சினிமா
10 hours ago
சினிமா
10 hours ago
சினிமா
10 hours ago
சினிமா
10 hours ago
சினிமா
14 hours ago
சினிமா
15 hours ago
சினிமா
17 hours ago
சினிமா
18 hours ago
சினிமா
19 hours ago
சினிமா
20 hours ago
சினிமா
21 hours ago
சினிமா
21 hours ago
சினிமா
22 hours ago
சினிமா
22 hours ago