'மிஷன் இம்பாஸிபிள் 7' படத்தில் பிரபாஸ்? ட்விட்டரில் வைரலாகும் பதிவு

By செய்திப்பிரிவு

டாம் க்ரூஸ் நடிப்பில் உருவாகி வரும் 'மிஷன் இம்பாஸிபிள் 7' படத்தில் பிரபாஸ் ஒரு கதாபாத்திரத்தில் நடிப்பதாகச் செய்திகள் பரவி வருகின்றன.

டாம் க்ரூஸ் நடிப்பில் வெளியாகி உலகமெங்கும் வரவேற்பைப் பெற்ற படம் ‘மிஷன் இம்பாஸிபிள்’. இப்பட வரிசையில் இதுவரை ஆறு பாகங்கள் வெளியாகியுள்ளன. 2018ஆம் ஆண்டு வெளியான ‘மிஷன் இம்பாஸிபிள்: ஃபால்அவுட்’ திரைப்படம் உலகமெங்கும் நல்ல வரவேற்பைப் பெற்றது. இதனால் இப்படத்தை இயக்கிய கிறிஸ்டோபர் மெக்குயரியிடமே அடுத்த இரண்டு பாகங்களை இயக்கும் பொறுப்பைத் தயாரிப்பு நிறுவனமான பாராமவுண்ட் வழங்கியுள்ளது.

கரோனா நெருக்கடி காரணமாகப் பல்வேறு தடைகளைத் தாண்டி இந்தப் படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. தற்போது இந்தப் படத்தில் ஒரு கதாபாத்திரத்தில் நடிகர் பிரபாஸ் நடிக்கவிருப்பதாக ட்விட்டரில் செய்தி பரவி வருகிறது.

பயனர் ஒருவர் பகிர்ந்துள்ள பதிவில், இத்தாலி நாட்டில் 'ராதே ஷ்யாம்' படப்பிடிப்புக்காகத் தங்கியிருக்கும் பிரபாஸை இயக்குநர் மெக்குயர் சந்தித்ததாகவும், அவர் சொன்ன கதையும், கதாபாத்திரமும் பிடித்திருந்ததால் பிரபாஸ் இதில் நடிக்க ஒப்புக்கொண்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. தொடர்ந்து கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று 'மிஷன் இம்பாஸிபிள்' படக்குழுவுடன் பிரபாஸ் இணைந்ததாகக் கூறப்படுகிறது.

'பாகுபலி' திரைப்படம் மூலம் தேசிய அளவில் பிரபலமான நடிகர் பிரபாஸ் 'மிஷன் இம்பாஸிபிள்' திரைப்படத்தின் மூலம் சர்வதேச கவனமும் பெறவிருப்பதாக அவரது ரசிகர்கள் இந்தச் செய்தியை உற்சாகமாகப் பகிர்ந்து வருகின்றனர். ஆனால், செய்தியின் உண்மைத்தன்மை குறித்து இன்னும் தெளிவு கிடைக்கவில்லை.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

1 hour ago

சினிமா

1 hour ago

சினிமா

2 hours ago

சினிமா

3 hours ago

சினிமா

3 hours ago

சினிமா

4 hours ago

சினிமா

5 hours ago

சினிமா

5 hours ago

சினிமா

6 hours ago

சினிமா

10 hours ago

சினிமா

10 hours ago

சினிமா

16 hours ago

சினிமா

16 hours ago

சினிமா

16 hours ago

சினிமா

16 hours ago

மேலும்