மார்வெல் திரைப்படங்களின் 4-வது கட்டம்: ‘எடர்னல்ஸ்’ ட்ரெய்லர் வெளியீடு

By செய்திப்பிரிவு

2008ஆம் ஆண்டு வெளியான ‘அயர்ன்மேன்’ படத்தின் மூலம் தொடங்கிய மார்வெல் சினிமாட்டிக் உலகத்தின் கதை, 2019ஆம் ஆண்டு 'ஸ்பைடர்மேன் ஃபார் ஃப்ரம் ஹோம்' திரைப்படத்துடன் முடிந்தது. 11 ஆண்டுகளில், 3 கட்டங்களாக மொத்தம் 23 படங்கள் இந்த வரிசையில் வெளியாகியுள்ளன.

இதன் அடுத்தகட்டமாக புதிய திரைப்படங்கள், பழைய திரைப்படங்களின் தொடர்ச்சிகள் எனப் புதிய அறிவிப்பை மார்வெல் நிறுவனம் கடந்த சில மாதங்களுக்கு முன்பு வெளியிட்டது. அதில் ‘ப்ளாக் விடோ’, ‘ஷாங்க் சி அண்ட் தி லெஜண்ட் ஆஃப் தி டென் ரிங்ஸ்’, ‘எடர்னல்ஸ்’, ஸ்பைடர்மேன்: நோ வே ஹோம்’, ‘டாக்டர் ஸ்ட்ரேஞ்ச் இன் தி மல்டிவெர்ஸ் ஆஃப் மேட்னஸ்’, ‘தார்: லவ் அண்ட் தண்டர்’ உள்ளிட்ட பல படங்கள் இடம்பெற்றன.

இதில் ‘எடர்னல்ஸ்’ படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்து விட்டது. தற்போது இப்படத்தின் இறுதிகட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இப்படத்தில் ஏஞ்சலினா ஜோலி, கெம்மா சான், சல்மா ஹயக், கிட் ஹாரிங்டன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இப்படம் விரைவில் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இப்படத்தை இந்த ஆண்டு சிறந்த இயக்குநருக்கான ஆஸ்கர் விருது வென்ற க்ளோயி ஸாவோ இயக்கியுள்ளார்.

இந்நிலையில் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் ட்ரெய்லரை மார்வெல் நிறுவனம் வெளியிட்டுள்ளது. இது ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. கடந்த ஆண்டு இறுதியில் வெளியாவதாக திட்டமிடப்பட்ட இப்படம் கரோனா அச்சுறுத்தலால் படப்பிடிப்பு தாமதாகி தற்போது தான் முடிவுக்கு வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

3 hours ago

சினிமா

6 hours ago

சினிமா

6 hours ago

சினிமா

7 hours ago

சினிமா

8 hours ago

சினிமா

8 hours ago

சினிமா

9 hours ago

சினிமா

10 hours ago

சினிமா

11 hours ago

சினிமா

11 hours ago

சினிமா

15 hours ago

சினிமா

15 hours ago

சினிமா

21 hours ago

சினிமா

21 hours ago

சினிமா

21 hours ago

மேலும்