ஹாலிவுட்டின் நட்சத்திர இயக்குநர்களில் ஒருவரான கிறிஸ்டோஃபர் நோலன், இரண்டாம் உலகப் போரை மையமாக வைத்து தனது அடுத்த படத்தை இயக்கவுள்ளார். இந்தப் படத்தின் தலைப்பு ’டன்கிர்க்’ என அறிவிக்கப்பட்டுள்ளது.
'டார்க் நைட்', 'இன்செப்ஷன்' உள்ளிட்ட பிரம்மாண்ட படைப்புகளின் இயக்குநரான கிறிஸ்டோபர் நோலன் கடைசியாக 2014-ஆம் ஆண்டு இண்டர்ஸ்டெல்லார் திரைப்படத்தை இயக்கியிருந்தார். தற்போது ஒரு வருடம் கழித்து அடுத்த படத்துக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இரண்டாம் உலகப் போரின் பொது டன்கிர்க் என்ற பிரெஞ்ச் நகரத்தில் நடந்த மக்கள் வெளியேற்றத்தைப் பற்றிய ஆக்ஷன் த்ரில்லர் படமாக இது உருவாக உள்ளது. வார்னர் பிரதர்ஸ் நிறுவனத்தோடு இணைந்து இந்தப் படத்தை தயாரிக்கவுள்ள நோலன், இதற்கான திரைக்கதையையும் எழுதியுள்ளார். இந்தப் படத்தில் மார்க் ரைலன்ஸ், டாம் ஹார்டி உள்ளிட்ட நடிகர்கள் நடிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
சமீபத்தில் இந்தப் படத்துக்கான நடிகர்கள் தேர்வு லண்டனில் நடைபெற்றது. அதிக பட்ஜெட்டில் தயாராகும் டன்கிர்க் ஐமேக்ஸ் 65எம்.எம் வடிவிலும், 65எம்.எம் அகல திரை வடிவிலும் படமாக்கப்படவுள்ளது. இதனால் ஒவ்வொரு காட்சியிலும் பிரம்மாண்டத்தை எதிர்பார்க்கலாம். நிஜமாக டன்கிர்க் வெளியேற்றம் நடந்த பகுதிகளிலேயே படப்பிடிப்பு நடைபெறும் எனத் தெரிகிறது.
’டன்கிர்க்’ ஜூலை 21, 2017 அன்று வெளியாகும் என வார்னர் பிரதர்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.
முக்கிய செய்திகள்
சினிமா
2 hours ago
சினிமா
2 hours ago
சினிமா
2 hours ago
சினிமா
2 hours ago
சினிமா
4 hours ago
சினிமா
6 hours ago
சினிமா
7 hours ago
சினிமா
7 hours ago
சினிமா
8 hours ago
சினிமா
8 hours ago
சினிமா
9 hours ago
சினிமா
10 hours ago
சினிமா
13 hours ago
சினிமா
12 hours ago
சினிமா
13 hours ago