ஏற்கெனவே நடித்த நடிகரை கிராஃபிக்ஸில் மாற்றிய இயக்குநர்: 'ஆர்மி ஆஃப் தி டெட்' ஆச்சரியங்கள்

By செய்திப்பிரிவு

'ஆர்மி ஆஃப் தி டெட்' திரைப்படத்தில் ஏற்கெனவே ஒரு கதாபாத்திரத்தில் நடித்த நடிகரை படத்தின் படப்பிடிப்பு முடிந்ததும் மொத்தமாக மாற்றியுள்ளது தற்போது தெரியவந்துள்ளது.

ஸாக் ஸ்னைடர் இயக்கத்தில் நெட்ஃபிளிக்ஸ் தயாரிப்பில் சில நாட்களுக்கு முன் 'ஆர்மி ஆஃப் தி டெட்' திரைப்படம் வெளியானது. பெரும்பாலான விமர்சனங்கள் படத்தைப் பாராட்டி வரும் நிலையில் முக்கியமாகப் படத்தின் பிரம்மாண்டம், சண்டைக் காட்சிகள், கிராஃபிக்ஸ் அத்தனை பேராலும் பாராட்டப்பட்டுள்ளது.

இந்தப் படத்தில் ஹெலிகாப்டர் பைலட் கதாபாத்திரத்தில் முதலில் க்றிஸ் டி எலியா என்கிற நடிகர் நடித்திருந்தார். ஆனால் மைனர் பெண்களை பாலியல் ரீதியாக துன்புறித்தினார் என்று எலியாவின் மீது குற்றச்சாட்டு எழுந்தது. பல்வேறு பெண்கள் இந்தப் புகாரை முன்வைத்திருந்தனர். ஆனால் இந்தப் புகார் எழும்போது 'ஆர்மி ஆஃப் தி டெட்' படப்பிடிப்பு முடிந்திருந்தது.

ஆனால் பாலியல் குற்றச்சாட்டுக்கு ஆளான ஒரு நடிகரை தங்களது படத்தில் நடிக்க வைக்க விரும்பாத தயாரிப்பு தரப்பும், இயக்குநரும் அந்தக் கதாபாத்திரத்தில் வேறொரு நடிகரை நடிக்க வைக்க முடிவு செய்தனர். அந்த கதாபாத்திரத்துக்கான காட்சிகளை மீண்டும் மற்ற நடிகர்களையும் உடன் வைத்து எடுப்பதில் பல சிக்கல்கள் இருந்ததால் வேறொரு அதிரடி முடிவு எடுக்கப்பட்டது.

எலியாவுக்கு பதிலாக டிக் நொடாரா என்கிற நடிகை அந்தக் கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டார். அவர் சம்ந்தப்பட்ட காட்சிகள் அனைத்தும், ஒரு அரங்கில் பச்சை திரைக்கு முன் அவரை மட்டும் தனியே வைத்து எடுக்கப்பட்டன. பின் விஷுவல் எஃபெக்ட்ஸ் உதவியுடன் அவை படத்தில் சேர்க்கப்பட்டன.

ஆனால் இதற்காக கூடுதலாக பல மில்லியன் டாலர்களை நெட்ஃபிளிக்ஸ் செலவழித்துள்ளது குறிப்பிடத்தக்கது. தற்போது படத்தின் இறுதி வடிவில் அந்தக் கதாபாத்திரம் மட்டும் தனியாக எடுக்கப்பட்டு படத்தில் சேர்க்கப்பட்டது என்பது இம்மியளவும் தெரியாத வண்ணம் கிராஃபிக்ஸ் மிகத் துல்லியமாக செய்யப்பட்டுள்ளது.

இந்த விஷயம் தற்போது வெளியே தெரிந்து ரசிகர்கள் பலரும் 'ஆர்மி ஆஃப் தி டெட்’ குழுவையும், நெட்ஃபிளிக்ஸ் எடுத்த துணிச்சலான முடிவையும் பாராட்டி வருகின்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

11 hours ago

சினிமா

15 hours ago

சினிமா

15 hours ago

சினிமா

16 hours ago

சினிமா

16 hours ago

சினிமா

17 hours ago

சினிமா

17 hours ago

சினிமா

18 hours ago

சினிமா

19 hours ago

சினிமா

20 hours ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

மேலும்