இயக்குநர் வுட்டீ ஆலனுடன் பணியாற்றியதற்கு வருந்துகிறேன்: ட்ரூ பேரிமோர்

By ஏஎன்ஐ

பிரபல ஹாலிவுட் இயக்குநர் வுட்டீ ஆலனுடன் தான் பணியாற்றியதை நினைத்துத் தற்போது வருந்துவதாக நடிகை ட்ரூ பேரிமோர் கூறியுள்ளார்.

ஹாலிவுட்டில் எண்ணற்ற படங்களை இயக்கிய மூத்த இயக்குநரான வுட்டி ஆலன் மீது, பாலியல் துன்புறுத்தல் குற்றச்சாட்டு உள்ளது. தன்னை வுட்டீ ஆலன் சிறு வயதில் பாலியல் ரீதியாக துன்புறுத்தினார் என்று அவரது தத்து மகளான டைலன் ஃபேரோ குற்றம்சாட்டியுள்ளார்.

டைலனின் தாய் மியா ஃபேரோ, சகோதரர் ரோனன் ஃபேரோ ஆகியோரும் டைலனுக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். ஆனால் வுட்டீ ஆலன் இந்தக் குற்றச்சாட்டுகளை தொடர்ந்து மறுத்து வருகிறார். மியா ஃபேரோ ஆலனுக்கு எதிராக சட்ட ரீதியிலான நடவடிக்கை எதுவும் இதுவரை எடுக்கவில்லை.

பிரபல ஹாலிவுட் நடிகை ட்ரூ பேரிமோர், அவரது பெயரிலேயே சின்னத்திரை நிகழ்ச்சி ஒன்றை நடத்துகிறார். இதில்; டைலன் விருந்தினராகப் பங்கேற்றுப் பேசினார்; இதில் பேசிய பேரிமோர், "1996ஆம் ஆண்டு வுட்டீ ஆலன் இயக்கத்தில் ஒரு படம் நடித்தேன்.

அந்த சமயத்தில் அவர் இயக்கத்தில் நடிப்பதே மிகப்பெரிய வாய்ப்பாகப் பார்க்கப்பட்டது. அதன் பின் எனக்குத் திருமணம் குழந்தைகள் என்று ஆன பிறகு நான் சில விஷயங்களை உணர ஆரம்பித்தேன். அப்போது அவர் மீது வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகளுக்குப் பாரா முகம் காட்டும்படி நான் நிர்பந்திக்கப்பட்டிருக்கிறேன் என்பது புரிந்தது. அதை நினைத்து இப்போது வருந்துகிறேன்" என்று ட்ரூ பேரிமோர் கூறியுள்ளார்.

இதற்கு பதிலளித்த டைலன், "கண்டிப்பாக அவரோட பணியாற்றக் கூடாது. அவர் ஒரு முட்டாள், அவர் ஒரு அரக்கன்எனக்கு நேர்ந்த அனுபவமே இப்படி உங்களை பேச வைத்திருக்கிறது என்பது மிகவும் துணிச்சலானது" என்று குறிப்பிட்டுள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

12 hours ago

சினிமா

15 hours ago

சினிமா

15 hours ago

சினிமா

16 hours ago

சினிமா

17 hours ago

சினிமா

18 hours ago

சினிமா

18 hours ago

சினிமா

19 hours ago

சினிமா

20 hours ago

சினிமா

20 hours ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

மேலும்