‘ஃபாஸ்ட் அண்ட் ஃப்யூரியஸ்’ வாய்ப்பு கிடைத்த கதை: வின் டீசல் பகிர்வு

By செய்திப்பிரிவு

ஜஸ்டின் லின் இயக்கத்தில் வின் டீசல், ஜான் சீனா, மிச்சல் ரோட்ரிகெஸ், டைரீஸ் கிப்சன் உள்ளிட்டோர் நடித்துள்ள படம் ‘ஃபாஸ்ட் அண்ட் ஃப்யூரியஸ் 9’. 2020ஆம் ஆண்டு மே மாதம் இப்படம் வெளியாகவிருந்தது. ஆனால், கரோனா அச்சுறுத்தலால் திரையரங்குகள் அனைத்தும் மூடப்பட்ட நிலையில் இப்படம் ஒரு வருடம் கழித்து இந்த ஏப்ரல் மாதம் ஒத்திவைக்கப்பட்டது.

ஆனால், உலகம் முழுவதும் கரோனா அச்சுறுத்தல் மீண்டும் அதிகரித்து வருவதால் இப்படம் வரும் ஜூன் மாதம் 25ஆம் தேதிக்கு மீண்டும் ஒத்திவைக்கப்பட்டது.

இந்நிலையில் ‘ஃபாஸ்ட் அண்ட் ஃப்யூரியஸ்’ திரைப்படங்களில் பணியாற்றிய அனுபவம் குறித்து வின் டீசல் கூறியிருப்பதாவது:

'' ‘நான் நடித்த ‘பிட்ச் ப்ளாக்’ திரைப்படத்தை யுனிவர்சல் நிறுவனம் வெளியிட்டது. அந்தக் காலகட்டத்தில் என்னிடம் கைவசம் இருந்த ஒரே பெரிய படம் அதுதான். அப்போது யுனிவர்சல் நிறுவனத்தின் நிர்வாகிகள் என்னிடம் ‘சட்டவிரோத கார் பந்தயம் குறித்த ஒரு கதை எங்களிடம் இருக்கிறது. அதில் நீங்கள் நடிக்க வேண்டும் என்று விரும்புகிறோம்’ என்றனர். அப்படத்தில் நான் சம்பந்தப்பட்ட ஒரே ஒரு காட்சியை மட்டுமே அவர்கள் விவரித்தனர். நான் உடனே சம்மதம் தெரிவித்துவிட்டேன்.

மறுநாள் ‘பிட்ச் ப்ளாக்’ படத்தின் ப்ரீமியர் காட்சிக்காக ஆஸ்திரேலியா சென்றபோது நான் அவர்கள் என்னிடம் கொடுத்த கதையைப் படித்தேன். ஆனால், அது நான் எதிர்பார்த்தது போல் இல்லை.

முரண் என்னவென்றால் அந்தக் கதாபாத்திரத்துக்குத் தேவையான விஷயங்கள் என்னிடம் இருந்தன. ஆனால், அதில் சில பிரச்சினைகளும் இருப்பதாக உணர்ந்தேன். அப்போதுதான் இயக்குநர் டேவிட் ஏயர் உள்ளே வந்தார். அவரும் என்னுடைய கதாபாத்திரத்தில் அதிக சிக்கல்கள் இருப்பதாகக் கூறினார். அந்தக் கதாபாத்திரத்தில் இருக்கும் சிக்கல்களை அவரும் உணர்ந்ததில் எனக்கு மகிழ்ச்சி. அதன் பிறகு கதையிலும் கதாபாத்திரத்திலும் சில மாற்றங்களைச் செய்த பிறகே நான் சம்மதம் தெரிவித்து நடித்தேன்''.

இவ்வாறு வின் டீசல் கூறினார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

47 mins ago

சினிமா

1 hour ago

சினிமா

1 hour ago

சினிமா

1 hour ago

சினிமா

2 hours ago

சினிமா

2 hours ago

சினிமா

4 hours ago

சினிமா

19 hours ago

சினிமா

22 hours ago

சினிமா

22 hours ago

சினிமா

23 hours ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

மேலும்