ஆஸ்கர் விருதுகள் 2021: சிறந்த திரைப்படமாக நோமேட்லேண்ட் தேர்வு

By செய்திப்பிரிவு

93-வது ஆஸ்கர் விருது வழங்கும் விழா லாஸ் ஏஞ்சல்ஸ், கலிஃபோர்னியாவில் இருக்கும் ஹாலிவுட்டின் டால்பி தியேட்டரில் மட்டுமல்லாமல் லாஸ் ஏஞ்சல்ஸின் யூனியன் ஸ்டேஷன் அரங்கிலும் இம்முறை நடைபெற்றது. இதில் க்ளோயி ஸாவோ இயக்கிய ’நோமேட்லேண்ட்’ சிறந்த திரைப்படமாகவும், ஸாவோ சிறந்த இயக்குநராகவும் வெற்றி பெற்றனர். சிறந்த இயக்குநர் என்கிற ஆஸ்கரை வெல்லும் இரண்டாவது பெண் ஸாவோ என்பது குறிப்பிடத்தக்கது.

விருது வென்றவர்கள் பட்டியல்

சிறந்த இயக்குநர் - க்ளோயீ ஸாவோ

சிறந்த திரைப்படம் - நோமேட்லேண்ட்

சிறந்த நடிகை - ஃப்ரான்சிஸ் மெக்டார்மண்ட் (நோமேட்லேண்ட்)

சிறந்த நடிகர் - ஆந்தனி ஹாப்கின்ஸ் (தி ஃபாதர்)

சிறந்த உறுதுணை நடிகர் - டேனியல் கலூயா (ஜூடாஸ் அண்ட் தி ப்ளாக் மெஸ்ஸைய்யா)

சிறந்த உறுதுணை நடிகை - யூ ஜங் யூன் (மினாரி)

சிறந்த சர்வதேசத் திரைப்படம் - அனதர் ரவுண்ட் (டென்மார்க்)

சிறந்த தழுவல் திரைக்கதை - தி ஃபாதர்

சிறந்த திரைக்கதை - ப்ராமிஸிங் யங் வுமன்

சிறந்த அனிமேஷன் திரைப்படம் - ஸோல்

சிறந்த பாடல் - ஃபைட் ஃபார் யூ (ஜூடாஸ் அண்ட் தி ப்ளாக் மெஸ்ஸைய்யா)

சிறந்த இசை - ஸோல்

சிறந்த படத்தொகுப்பு - சவுண்ட் ஆஃப் மெடல்

சிறந்த ஒளிப்பதிவு - மேங்க்

சிறந்த தயாரிப்பு வடிவமைப்பு - மேங்க்

சிறந்த கிராஃபிக்ஸ் - டெனட்

சிறந்த ஆவணப் படம் - மை ஆக்டோபஸ் டீச்சர்

சிறந்த ஆவணக் குறும்படம் - கோலெட்

சிறந்த அனிமேஷன் குறும்படம் - இஃப் எனிதிங் ஹேப்பன்ஸ் ஐ லவ் யூ

சிறந்த குறும்படம் - டூ டிஸ்டண்ட் ஸ்ட்ரேஞ்சர்ஸ்

சிறந்த ஒலி - சவுண்ட் ஆஃப் மெடல்

சிறந்த ஒப்பனை, சிகை அலங்காரம் - மா ரெய்னீஸ் ப்ளாக் பாட்டம்

சிறந்த ஆடை வடிவமைப்பு - மா ரெய்னீஸ் ப்ளாக் பாட்டம்

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE