வெளியான நாளிலிருந்தே பல வசூல் சாதனைகளை முறியடித்து வரும் புதிய 'ஸ்டார் வார்ஸ்' திரைப்படம், தற்போது அதிவேகமாக 1 பில்லியன் டாலர் வசூலை எட்டிய படம் என்ற சாதனையையும் படைத்துள்ளது.
ஜே.ஜே.அப்ராம்ஸ் இயக்கத்தில் டிசம்பர் 16-ஆம் தேதி, 'ஸ்டார் வார்ஸ்: தி ஃபோர்ஸ் அவேகன்ஸ்' திரைப்படம் வெளியானது. ஸ்டார் வார்ஸ் திரைப்பட தொடரில் 7-வது படமான இதில் ஹாரிஸன் ஃபோர்ட், கேரி ஃபிஷர், டெய்ஸி ரிட்லி உள்ளிட்ட நடிகர்கள் நடித்துள்ளனர்.
விமர்சன ரீதியாகவும் பெரும் வரவேற்பை பெற்ற 'ஃபோர்ஸ் அவேகன்ஸ்', வெளியான நாள் அன்றே அதிக முதல் நாள் வசூல் என்ற சாதனையை படைத்தது. தற்போது 2-வது வாரமாக திரையரங்குகளில் ஓடிக் கொண்டிருக்கும் ஸ்டார் வார்ஸ், 1 பில்லியன் டாலர் வசூலை வேகமாக கடந்துள்ளது. இதற்கு முன், 'ஜுராஸிக் வேர்ல்ட்' திரைப்படம் 13 நாட்களில் 1 பில்லியன் டாலரை கடந்ததே சாதனையாக இருந்தது. ஸ்டார் வார்ஸ், 12 நாட்களில் அந்த சாதனையை எட்டியுள்ளது.
’ரே’ பாத்திரத்தில் நடித்திருக்கும் டெய்ஸி ரிட்லி
இன்று வரை, அமெரிக்காவில் மட்டும் 544.6 மில்லியன் டாலர்களை இப்படம் வசூலித்துள்ளது. இது குறித்து பேசிய டிஸ்னி நிறுவனத்தின் விநியோகப் பிரிவு தலைவர் டேவ் ஹாலிஸ், "சாதனைகள் உடையும் வேகத்தைப் பார்க்கும் போது, இதற்கான ரசிகர்கள் கூட்டம் விரிவடைந்துள்ளதை காட்டுகிறது. பலர் இந்தத் திரைப்படத்தை 3-4 முறை பார்த்து ரசித்துள்ளனர். ஒரு முக்கிய கலாச்சார நிகழ்வைப் போல மாறியுள்ள இதில் பங்கேற்க அனைவரும் விரும்புகின்றனர்" என்றார்.
'ஸ்டார் வார்ஸ்' படத்தின் அடுத்த பாகம் மே 26, 2017 அன்று வெளியாகும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
முக்கிய செய்திகள்
சினிமா
1 hour ago
சினிமா
1 hour ago
சினிமா
1 hour ago
சினிமா
1 hour ago
சினிமா
4 hours ago
சினிமா
6 hours ago
சினிமா
6 hours ago
சினிமா
7 hours ago
சினிமா
7 hours ago
சினிமா
8 hours ago
சினிமா
9 hours ago
சினிமா
9 hours ago
சினிமா
12 hours ago
சினிமா
12 hours ago
சினிமா
12 hours ago