‘டிரான்ஸ்ஃபார்மர்ஸ்’ அடுத்த படத்துக்கான முதற்கட்டப் பணிகள் தொடங்கியுள்ளன.
பாராமவுண்ட் நிறுவனம் தயாரித்த ‘டிரான்ஸ்ஃபார்மர்ஸ்’ திரைப்படங்களுக்கு உலகம் முழுவதும் ரசிகர்கள் உண்டு. இப்படவரிசையின் முதல் ஐந்து படங்களை மைக்கேல் பே இயக்கினார். 1980களில் காமிக்ஸ் வடிவிலும், கார்ட்டூன் வடிவிலும் வெளியாகிக் கொண்டிருந்த இவை, 2007ஆம் ஆண்டு முதல் திரைப்படங்களாக வெளியாகி வருகின்றன. இப்பட வரிசையில் கடைசி திரைப்படமான 2018ஆம் ஆண்டு ‘பம்பிள்பீ’ வெளியாகியிருந்தது.
இந்நிலையில் ‘டிரான்ஸ்ஃபார்மர்ஸ்’ பட வரிசையின் அடுத்த படத்துக்கான பணிகளை பாராமவுண்ட் நிறுவனம் தொடங்கியுள்ளது. இப்படத்துக்கான கதை எழுதும் பொறுப்பை நெட்ஃப்ளிக்ஸ் தயாரிப்பில் வெளியான ‘தி டிஃபென்டெர்ஸ்’ வெப் சீரிஸை இயக்கிய மார்கோ ராமிரெஸ் என்பவரிடம் பாராமவுண்ட் நிறுவனம் ஒப்படைத்துள்ளது.
2020ஆம் ஆண்டு வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்ற ‘சார்ம் சிட்டி கிங்ஸ்’ படத்தை இயக்கிய ஆங்கெல் மானுவெல் சோடோ இப்படத்தின் இயக்குநராக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.
» ராணா அனுப்பிய பரிசு; நன்றி சொன்ன த்ரிஷா
» திரைத்துறையில் 18 ஆண்டுகள்: நெகிழ்ச்சியுடன் நன்றி சொன்ன அல்லு அர்ஜுன்
இப்படம் முந்தைய ‘டிரான்ஸ்ஃபார்மர்ஸ்’ படங்களோடு தொடர்பில்லாத வகையில் முற்றிலும் புதிய களமாக இருக்கும் என்று கூறப்படுகிறது.
முக்கிய செய்திகள்
சினிமா
1 hour ago
சினிமா
4 hours ago
சினிமா
5 hours ago
சினிமா
6 hours ago
சினிமா
9 hours ago
சினிமா
9 hours ago
சினிமா
9 hours ago
சினிமா
10 hours ago
சினிமா
10 hours ago
சினிமா
19 hours ago
சினிமா
19 hours ago
சினிமா
20 hours ago
சினிமா
21 hours ago
சினிமா
22 hours ago
சினிமா
1 day ago