ஹாலிவுட்டின் பிரபல இயக்குநர் ஸ்டீவன் ஸ்பீல்பெர்க். ‘ஜூராசிக் பார்க்’, ‘ஜாஸ்’, ‘இண்டியானா ஜோன்ஸ்’ உள்ளிட்ட படங்களின் மூலம் உலகம் முழுவதுமுள்ள ரசிகர்களை ஈர்த்தவர். இரண்டு முறை சிறந்த இயக்குநருக்கான ஆஸ்கர் விருதை வென்றவர்.
இறுதியாக ஸ்பீல்பெர்க் இயக்கியாக ‘ரெடி ஒன் ப்ளேயர்’ திரைப்படம் உலகம் முழுவதும் பெரும் வரவேற்பை பெற்றது. இதனைத் தொடர்ந்து 1961ஆம் ஆண்டு வெளியான ‘வெஸ்ட் சைட் ஸ்டோரி’ என்ற படத்தை ஸ்பீல்பெர்க் ரீமேக் செய்து வருகிறார். கடந்த ஆண்டு வெளியாக வேண்டிய இப்படம் கரோனா அச்சுறுத்தலால் பணிகள் நிறுத்தப்பட்டது. இந்நிலையில் தற்போது அடுத்த படத்துக்கு தயாராகி வருகிறார் ஸ்பீல்பெர்க்.
இப்படம் ஸ்பீல்பெர்க்கின் குழந்தைப் பருவத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாகவுள்ளதாக கூறப்படுகிறது. ஸ்பீல்பெர்க் தனது சிறுவயதில் அரிஸோனா மாகாணத்தில் இருந்த தருணங்களைக் கொண்டு இப்படத்தின் எழுதி வருகிறார். ஸ்பீல்பெர்க் உடன் ‘ம்யூனிக்’ ‘லிங்கன்’ ஆகிய படங்களில் பணிபுரிந்த டோனி குஷ்னர் இப்படத்திலும் இணை கதாசிரியராக பணிபுரிகிறார்.
1950 மற்றும் 60 காலகட்டங்களில் நடப்பது போல உருவாகும் இப்படத்தில் மிச்செல் வில்லியம்ஸ் ஒரு முக்கிய பாத்திரத்தில் நடிக்கவுள்ளார். பிற நடிகர்கள் தேர்வு முடிவானதும், இந்த ஆண்டில் படப்பிடிப்பை தொடங்கி, அடுத்த ஆண்டு படத்தை திரையரங்குகளில் படத்தை வெளியிட படக்குழுவினர் முடிவு செய்துள்ளனர்.
முக்கிய செய்திகள்
சினிமா
8 hours ago
சினிமா
11 hours ago
சினிமா
11 hours ago
சினிமா
12 hours ago
சினிமா
13 hours ago
சினிமா
13 hours ago
சினிமா
14 hours ago
சினிமா
15 hours ago
சினிமா
15 hours ago
சினிமா
16 hours ago
சினிமா
20 hours ago
சினிமா
20 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago