ஜேம்ஸ்பாண்ட் முத்த நீளத்தை சென்சார் குறைத்ததால் சலசலப்பு

By ஆலன் ஸ்மித்தீ

ஜேம்ஸ்பாண்ட் படத்தின் முத்தக் காட்சி நீளமாக இருப்பதால், அதை 50 சதவீதம் நீக்கவேண்டும் என இந்திய திரைப்படத் தணிக்கைத் துறை உத்தரவிட்டுள்ளது.

டேனியல் க்ரெய்க் நடிப்பில் 'ஸ்பெட்கர்' திரைப்படம் இந்தியாவில் இந்த வாரம் வெளியாகவுள்ளது. ஆனால் இது குறித்து ஜேம்ஸ்பாண்ட் ரசிகர்கள் பலர் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.

அவர்களது அதிருப்திக்கு காரணம் இந்த ஜேம்ஸ்பாண்ட் படத்தில், அவருக்கே உரிய 'முத்திரை' காட்சிகள் நீக்கப்பட்டிருப்பது தான். இதற்கு ஜேம்ஸ்பாண்டோ, டேனியல் க்ரெய்கோ காரணம் அல்ல. நமது தணிக்கைத் துறை (சென்சார் போர்ட்) தான்.

எந்த வெளிநாட்டுத் திரைப்படம் வெளியாக வேண்டுமானாலும், அந்தந்த நாடுகளில் அந்தப் படம் மீண்டும் தணிக்கை செய்யப்பட்ட பின்பே வெளியிடப்படும். எனவே ஜேம்ஸ்பாண்டும் இந்திய தணிக்கைத் துறையின் கத்திரிக்கு ஆளாகியது.

இதில் வழக்கமான ஜேம்ஸ் பாண்ட் பட பாணியில், டேனியல் க்ரெய்க்கும், மோனிகா பெல்லூசியும் இடம்பெறும் முத்தக் காட்சி உள்ளது. இது அதிக நேரம் நீடிப்பதால், அதை 50 சதவீதம் குறைக்க வேண்டும் என உத்தரவிட்டிருப்பதாகத் தெரிகிறது. மேலும் 2 ஆபாச வார்த்தைகளும் நீக்கப்பட்டுள்ளது. படத்துக்கு U/A சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.

மேலும் இது குறித்து தனியார் இணையதளம் ஒன்றில், "தணிக்கைத் துறை ஜேம்ஸ் பாண்டின் முத்தக் காட்சிகளுக்கு எதிரானது அல்ல. ஆனால் அந்தக் காட்சிகள் நீளமாக இருந்ததே பிரச்சினை" என தணிக்கைத் துறை அதிகாரி ஒருவர் கூறியதாக செய்தி வெளியானது.

இதுவே நம் நெட்டிசன்களுக்கு போதுமானதாக இருந்தது. அடுத்த நிமிடமே, ட்விட்டரில், #SanskariJamesBond (பாரம்பரிய ஜேம்ஸ்பாண்ட்) என்ற ஹாஷ்டேக்கை வைத்து எக்கச்சக்க கலாய்ப்பு ட்வீட்டுகளை தட்டி விட்டனர். மேலும் CBFC என்ற ஹாஷ்டேகும் அதிக எண்ணிக்கையில் வலம் வந்தது.

ஏற்கனவே மாட்டிறைச்சி தடை, நூடுல்ஸ் தடை என பலவற்றை வைத்து கலாய்த்துக் கொண்டிருந்த இணையவாசிகளுக்கு, மெல்லுவதற்கு புதிதாக சிக்கிய அவல் இந்த ஜேம்ஸ்பாண்ட் சென்சார் செய்தி.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

2 hours ago

சினிமா

3 hours ago

சினிமா

3 hours ago

சினிமா

3 hours ago

சினிமா

4 hours ago

சினிமா

5 hours ago

சினிமா

6 hours ago

சினிமா

21 hours ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

மேலும்