மீண்டும் 'ஸ்பை கிட்ஸ்' படத்தோடு களமிறங்கும் ராபர்ட் ராட்ரிகஸ்

By ஏஎன்ஐ

'ஸ்பை கிட்ஸ்' திரைவரிசையை மீண்டும் புதிதாகத் தொடங்க இயக்குநர் ராபர்ட் ராட்ரிகஸ் முடிவெடுத்துள்ளார்.

2001ஆம் ஆண்டு ராபர்ட் ராட்ரிகஸ் எழுத்து, இயக்கம் மற்றும் தயாரிப்பில் 'ஸ்பை கிட்ஸ்' முதல் பாகம் வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்றது. குடும்பம், குழந்தைகளுக்கான சிறந்த பொழுதுபோக்குத் திரைப்படம் என்கிற பாராட்டை ஸ்பை கிட்ஸ் பெற்றது. இதன் இரண்டாம் பாகமும் அதே அளவு வரவேற்பைப் பெற்றது. ஆனால் 3 மற்றும் 4வது பாகங்கள் அந்த அளவுக்கு வெற்றிபெறவில்லை. விமர்சனங்களும் எதிர்மறையாகவே இருந்தன. எனவே 2011ஆம் ஆண்டோடு ஸ்பை கிட்ஸ் வரிசை முடிந்தது.

தற்போது மீண்டும் ஸ்பை கிட்ஸ் திரைவரிசையை புதிதாகத் தொடங்க திட்டமிட்டுள்ளார். இந்த ரீபூட்டை ஸ்கைடேன்ஸ் மீடியா மற்றும் ஸ்பைக்ளாஸ் மீடியா நிறுவனங்களுடன் சேர்ந்து ராட்ரிகஸ் உருவாக்கவிருக்கிறார். அவரே எழுதி இயக்கவிருக்கும் இந்தப் படத்தை ஸ்கைடான்ஸ் முதன்மை தயாரிப்பு நிறுவனமாக தயாரிக்கிறது. நிர்வாகத் தயாரிப்பை ஸ்பைக்ளாஸ் கவனிக்கும்.

பல கலாச்சாரங்களைச் சேர்ந்தவர்கள் இருக்கும் ஒரு குடும்பத்தில் நடக்கும் கதையாக இந்தப் படம் உருவாகிறது. மற்ற விவரங்கள் வரும் நாட்களில் தெரியவரும் என்று ஹாலிவுட் வட்டாரங்கள் கூறுகின்றன.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

13 hours ago

சினிமா

16 hours ago

சினிமா

16 hours ago

சினிமா

17 hours ago

சினிமா

18 hours ago

சினிமா

18 hours ago

சினிமா

19 hours ago

சினிமா

20 hours ago

சினிமா

21 hours ago

சினிமா

21 hours ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

மேலும்