நடிகர் டாம் ஹார்டி ஊரடங்கு விதிகளை மீறினாரா? புதிய புகைப்படங்களால் சர்ச்சை

By ஐஏஎன்எஸ்

நடிகர் டாம் ஹார்டி ஜிம்மை விட்டு வெளியே வரும் புகைப்படங்கள் இணையத்தில் பகிரப்பட்டுள்ளன. இதனால் அவர் ஊரடங்கு விதிமுறைகளை மீறியதாக சர்ச்சை எழுந்துள்ளது.

கரோனா தொற்றைக் கட்டுப்படுத்த லண்டனில் ஊரடங்கு அமலில் உள்ளது. இந்நிலையில் வெள்ளிக்கிழமை அன்று, தென்மேற்கு லண்டனில், ரிச்மண்ட் என்கிற பகுதியில் இருக்கும் எலிவேட் மார்ஷியல் ஆர்ட்ஸ் என்கிற இடத்துக்கு டாம் ஹார்டி வந்து சென்றார். அந்த இடத்தின் முன் வாசலில், அந்த இடம் மூடப்பட்டிருப்பதாகப் போட்டிருந்தாலும் பின் பக்கம் இருக்கும் படிக்கட்டு வழியாக டாம் ஹார்டி சென்று வந்துள்ளார்.

டாம் ஹார்டி பின்பக்கமாகப் படிகட்டில் இறங்கி வந்தார் என்றும், உடற்பயிற்சிக்கான முழுமையான உடையில் இருந்த அவர், பயிற்சி செய்துவிட்டு வந்திருப்பது போலவே காணப்பட்டார் என்றும் அவரைப் பார்த்தவர்கள் கூறியுள்ளனர்.

"தனது காரின் அருகே சென்ற அவர் தனது பையை வைத்துவிட்டு அதிலிருந்து ஒரு ஸ்ப்ரேவை எடுத்துத் தோளில் அடித்துக் கொண்டார். அவரை அடிக்கடி இங்கு பார்க்கலாம். இந்த ஜிம்முக்கு அவர் வந்து போவது வாடிக்கைதான். ஜிம் முன்பக்கம் மூடப்பட்டிருப்பதால் அநேகமாக அவரிடமும் தனியாக ஒரு சாவி இருக்கலாம்" என்று ஹார்டியைப் பார்த்த சிலர் கூறியுள்ளனர்.

'வெனம்' திரைப்படத்தின் இரண்டாவது பாகத்திலும் நாயகனாக நடிக்கும் ஹார்டி, அந்தப் படத்துக்காகத் தனது தனிப்பட்ட பயிற்சியாளரின் கீழ் உடற்பயிற்சி செய்து வருகிறார். அதன் புகைப்படம் அண்மையில் வெளியானது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

12 hours ago

சினிமா

16 hours ago

சினிமா

16 hours ago

சினிமா

17 hours ago

சினிமா

18 hours ago

சினிமா

18 hours ago

சினிமா

19 hours ago

சினிமா

20 hours ago

சினிமா

20 hours ago

சினிமா

21 hours ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

மேலும்