ரூ.201 கோடிக்கு வீடு வாங்கிய பிரபல நகைச்சுவையாளர்

By ஏஎன்ஐ

தென் ஆப்பிரிக்காவைப் பூர்வீகமாகக் கொண்ட நகைச்சுவையாளர் ட்ரெவர் நோவா 201.1 கோடி ரூபாய் மதிப்பிலான வீடு ஒன்றை வாங்கியுள்ளார். நடிகை மின்கா கெல்லியைக் காதலித்து வரும் நோவா, இந்த வீட்டில் அவருடன் வசிக்கவுள்ளார்.

காமெடி சென்ட்ரல் என்கிற அமெரிக்க சேனலில் 'தி டெய்லி ஷோ' என்ற நிகழ்ச்சியின் தொகுப்பாளர் மற்றும் எழுத்தாளர் ட்ரெவர் நோவா. தற்போது லாஸ் ஏஞ்சல்ஸ் நகரின் பெல் ஏர் பகுதியில், 11,000 சதுர அடி அளவிலான பிரம்மாண்ட வீடு ஒன்றை இந்த மாத ஆரம்பத்தில் வாங்கியிருக்கிறார்.

ஜப்பானியக் கட்டிடக் கலையின் அடிப்படையில் கட்டப்பட்டுள்ள இந்த வீடு அடுக்கி வைக்கப்பட்ட பெட்டிகளைப் போன்ற அமைப்பைக் கொண்டது. 3 மாடிகள், 6 படுக்கையறைகள், 11 குளியலறைகள், லிஃப்ட், ஸ்பா, சின்ன திரை அரங்கம், நீச்சல் குளம் உள்ளிட்ட வசதிகளை இந்த வீடு கொண்டுள்ளது.

40 வயதான மின்கா கெல்லியுடனான ட்ரெவர் நோவாவின் காதல் தீவிரமாகத் தொடர்ந்து வருவதால் இருவரும் சேர்ந்து இந்த வீட்டில் வசிப்பார்கள் என்று கூறப்படுகிறது.

'தி டெய்லி ஷோ'வில் அரசியல், சினிமா உட்பட பல தலைப்புகளில் நையாண்டி பேசுவது நோவாவின் வழக்கம். இதன் மூலம் அவர் சர்வதேசப் புகழை அடைந்திருக்கிறார். 2021 கிராமி விருதுகள் விழாவை நோவாதான் தொகுத்து வழங்குகிறார். கரோனா நெருக்கடி காரணமாக 'தி டெய்லி ஷோ' நிகழ்ச்சியைத்தான் இருந்த இடத்திலிருந்தே தொகுத்து வழங்கி வருகிறார்.

மின்கா கெல்லி, 'டைட்டன்ஸ்' என்கிற வெப் சீரிஸின் மூலமும், 'பேரண்ட்ஹுட்', 'சார்லீஸ் ஏஞ்சல்ஸ்' உள்ளிட்ட தொலைக்காட்சித் தொடர்கள் மூலமும் பிரபலமடைந்தவர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

27 mins ago

சினிமா

2 hours ago

சினிமா

16 hours ago

சினிமா

20 hours ago

சினிமா

20 hours ago

சினிமா

21 hours ago

சினிமா

22 hours ago

சினிமா

22 hours ago

சினிமா

23 hours ago

சினிமா

23 hours ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

மேலும்