கிறிஸ்டோபர் நோலன் போல யாரும் படமெடுப்பதில்லை என்று நடிகர் ராபர்ட் பேட்டின்சன் கூறியுள்ளார்.
கிறிஸ்டோபர் நோலன் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘டெனெட்’. பெரும் பொருட்செலவில் உருவாகியுள்ள இப்படத்தில் ஜான் டேவிட் வாஷிங்டன், ராபர்ட் பேட்டின்சன், டிம்பிள் கபாடியா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். கரோனா நெருக்கடியால் ரிலீஸ் தேதி பலமுறை ஒத்திவைக்கப்பட்ட இப்படம் கடந்த மாதம் சில நாடுகளில் மட்டும் வெளியானது. தற்போது இந்தியாவில் திரையரங்குகள் திறக்கப்பட்டுள்ளதால் வரும் டிசம்பர் 5ஆம் தேதி ‘டெனெட்’ வெளியாகவுள்ளது.
இந்நிலையில் இப்படம் குறித்து நடிகர் ராபர்ட் பேட்டின்சன் கூறியுள்ளதாவது:
''பல மாதங்களாகத் திரையரங்குகளுக்குச் செல்ல முடியாமல் தவித்துக் கொண்டிருந்த மக்களுக்கு இது ஒரு அற்புதமான தருணம். சினிமாவில் என்ன சாத்தியம் என்பதை இது காட்டுகிறது. கிட்டத்தட்ட எந்தவித விஷுவல் எஃபெக்ட்களும் இன்றி மிக மிகச் சிறப்பாகச் செயல்பட நோலன் விரும்புகிறார். இது ஒரு மிகச்சிறந்த அனுபவம். இயன்றளவு பெரிய திரையில் காண்பதை விட வேறெதுவும் அந்த அனுபவத்தைத் தர முடியாது.
நோலன் போல யாரும் படமெடுப்பதில்லை. விசேஷமாக உருவாக்கப்பட்ட ஐமேக்ஸ் கேமராக்கள் உள்ளிட்ட புதிய தொழில்நுட்பங்கள் இப்படத்தில் பயன்படுத்தப்பட்டுள்ளன. இப்படத்தைத் திரையரங்கில் பார்க்காமல் இருப்பதை என்னால் கற்பனை கூட செய்யமுடியவில்லை''.
இவ்வாறு ராபர்ட் பேட்டின்சன் கூறியுள்ளார்.
முக்கிய செய்திகள்
சினிமா
52 mins ago
சினிமா
15 hours ago
சினிமா
18 hours ago
சினிமா
18 hours ago
சினிமா
19 hours ago
சினிமா
20 hours ago
சினிமா
21 hours ago
சினிமா
21 hours ago
சினிமா
22 hours ago
சினிமா
23 hours ago
சினிமா
23 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago