ஓடிடியில் வெளியாகிறதா ‘காட்ஸில்லா vs காங்’?

By பிடிஐ

மான்ஸ்டர்வெர்ஸ் படவரிசையின் அடுத்த படமான ‘காட்ஸில்லா வெர்சஸ் காங்’ ஓடிடியில் வெளியாக வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.

லெஜண்ட்ரி நிறுவனம் மான்ஸ்டர்வெர்ஸ் என்ற பெயரில் சில படங்களைத் தயாரித்து வருகிறது. இதில் 'காட்ஸில்லா' (2014), 'காங்: தி ஸ்கல் ஐலேண்ட்' (2017), 'காட்ஸில்லா: கிங் ஆஃப் மான்ஸ்டர்ஸ்' (2019) ஆகிய படங்கள் அடக்கம். இப்படங்களின் தொடர்ச்சியாக தற்போது ‘காட்ஸில்லா வெர்சஸ் காங்’ என்ற திரைப்படம் உருவாகி வருகிறது. ஆடம் விங்கார்ட் இயக்கிவரும் இப்படம் வரும் 2021ஆம் ஆண்டு வெளியாகிறது.

இந்நிலையில் கரோனா அச்சுறுத்தல் காரணமாக இப்படம் ஓடிடியில் வெளியாக வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது. வார்னர் ப்ரதர்ஸ் மற்றும் லெஜண்ட்ரி நிறுவனம் இணைந்து தயாரிக்கும் இப்படத்தின் உரிமையை நெட்ஃப்ளிக்ஸ் நிறுவனம் 200 மில்லியன் டாலர்கள் கொடுத்து வாங்கப் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும், இதற்கு வார்னர் ப்ரதர்ஸ் நிறுவனம் ஒத்துழைக்கவில்லை என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதுகுறித்து லெஜண்ட்ரி நிறுவனத்தின் நிர்வாகிகள் வாய் திறக்காத நிலையில், வார்னர் பிரதர்ஸ் நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளர் ஒருவர், படம் திட்டமிட்டபடி திரையரங்குகளில் வெளியாகும் என்று கூறியுள்ளார்.

இப்படத்தில் 75 சதவீதம் முதலீடு செய்திருக்கும் லெஜண்ட்ரி நிறுவனம் ஓடிடி வெளியீட்டுக்குத் தயாராக இருப்பதாகவும், ஆனால் வார்னர் ப்ரதர்ஸ் நிர்வாகம் அதற்கு முட்டுக்கட்டை போடுவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

மேலும் ‘காட்ஸில்லா வெர்சஸ் காங்’ திரைப்படத்தைத் திரையரங்குகள் மட்டுமின்றி ஹெச்பிஓ மேக்ஸ் தளத்தில் வெளியிடவும் வார்னர் ப்ரதர்ஸ் நிறுவனம் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகத் தெரிகிறது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

7 hours ago

சினிமா

7 hours ago

சினிமா

7 hours ago

சினிமா

8 hours ago

சினிமா

8 hours ago

சினிமா

9 hours ago

சினிமா

11 hours ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

மேலும்